காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக 05.11.2015 வியாழக்கிழமை ஆவணம் கையளித்தனர்.
காத்தான்குடியிலுள்ள 55,000 மக்கள் சனத்தொகைக்கேற்ப காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் போதிய வசதியின்மை காரணமாக எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ளவுள்ள இவ்வைத்தியசாலை தொடர்பாகவும் அங்குள்ள குறைபாடுகள் தேவைப்பாடுகள் மற்றும் ஆளணிப்பற்றாக்குறை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கட்டட திருத்த வேலைகள், வளப்பற்றாக்குறைகள், போதிய மருத்துவ வசதியின்மை இதனால் பாதிக்கப்படும் எமது காத்தான்குடி வைத்தியசாலையை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு அனைத்து தரப்பினருக்கும் உண்டு என்ற பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துடன் காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்கள் இது விடயமாக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் ஊடாக பல காத்திரமான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினருடனும் பேசி குறிப்பாக வைத்திய அத்தியட்கர் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் அரசியல் பிரமுகர்கள் புத்திஜீவிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நலன் விரும்பிகள் ஆகியோருடன் ஊரின் சொத்தாக விளங்கும் வைத்தியாலையை புணரமைப்பு செய்வதற்கான ஒரு தீர்க்கமான முடிவொன்றினை மேற்கொள்வது என சம்மேளனத்தினால் உறுதியளிக்கப்பட்டது.
அத்துடன் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ.எம் சுபைர் சீ சீ யினால் வைத்தியசாலையில் தற்போதுள்ள நிலை தொடர்பாக விளக்கமளித்ததுடன் நோயாளிகள் இங்கு வராது அயல் பிரதேச வைத்தியசாலைக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டினார். இதனை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்பூட்டல் செய்வது எனவும் சம்மேளனமும் மீடியா போரமும் இதை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வது என தீர்மனிக்கப்பட்டது.
மேற்படி வைத்தியாலையிலுள்ள குறைபாடுகளை முன்கொண்டு வந்த காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்களுக்கு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நன்றிகளை தெரிவித்துக்கொண்டது.
- நமது நிருபர்


Leave a comment