பீ ஜே வருகிறார்! ஒடுக்க நினைப்பது புத்தி “சாலி”த் தனமல்ல

pjபா ஜ ஆளும் பாரதம் இருந்து

பீ ஜே வருகிறார்

பிரச்சாரம் பண்ண

கூச்சல் போடுறார்

கொஞ்சப் பேருக்கு

காய்ச்சல் அடிக்குது

கபுறடி அடியார்க்கு

பீ ஜே வருகிறார்

பிரச்சாரம் பண்ண

பேச்சால் ஷிர்க்கின்

Bபெண்டை உடைத்தவர்

ஆச்சர்ய பதில்களால்

அதிகம் பேர் கவர்ந்தவர்

ஏச்சுக்கும் அடிக்கும்

இரையாகிப் போனவர்

பிந்திய காலத்தில்

பீ ஜே இயம்பியதில்

ஏற்க முடியாதவை

இருப்பது உண்மை

சிறந்ததை ஏற்று

மற்றதை மறுப்பதே

அழகிய கொள்கை

pj

அதனை விட்டு

வெத்து சாலிகளும்

கத்தும் சாலிகளும்

ஒன்றாய் நின்று

ஒடுக்க நினைப்பது

புத்தி சாலித் தனமல்ல

புரிந்தால் சரி.

  • நிஷவ்ஸ்

Published by

Leave a comment