பி.ஜே வந்தால் உன் மூளை கொதிப்பது ஏன்…?

  • இர்ஷாட் ஏ. காதர்

pjacju jammiathulகாத்தான்குடி: தமிழக மார்க்க அறிஞர் பி. ஜெய்னுலாப்தீன் இலங்கை வருகையை கருத்திற்கொண்டு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஓர் துண்டுப்பிரசுரத்தை அதிரடியாக வெளியிட்டு சாதித்துக்காட்டியிருக்கிறது. “கடந்த காலங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள்” என்று, அசம்பாவிதங்களைத் தூண்டிவிட்ட இந்த இயக்கமே இப்போது துண்டொன்றை வீசிவிட்டிருக்கிறது வேடிக்கை.

இலங்கை உலமாக்களின் கண்ணியத்தைத் தவிடுபொடியாக்கும் தற்போதைய ஜம்மிய்யாவின் நிர்வாகம், அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பதிலும், அவர்களுக்கு கூஜா தூக்குவதிலும் எந்தக் குறையும் மனக்கசப்புக்களுமில்லாமல் முழு மூச்சாக சேவையாற்றி வருகின்றது.

அழுத்கமை, தர்ஹா டவுண் மற்றும் பேருவளை எரியும் போது லண்டனில் குளிர்காய்ந்த அதன் தலைவர் உட்பட அனைவரும் இந்நேரத்தில் நினைவுகூறப்பட வேண்டியவர்களே!

ஹலாலை கோட்டாவுக்காக விட்டுக்கொடுத்தல், ஜெனிவா, மற்றும் ஐரோப்பா பயணங்கள், காணித்துண்டுகள் அன்பளிப்பு இப்படி அரசியல் அடிவருடிகளுக்குத் துணைபோகும் ஜம்மிய்யாவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அசின் விராது வரும் போதோ, அசின் விராதுவின் மாநாட்டில் முஸ்லிம்களை அவன் தூற்றும் போதோ, தம்புள்ளை பள்ளிவாயல் தாக்கப்படும்போதோ, அழுத்கமை எரியும்போதோ வாய்மூடி மௌனம் காத்த ஜம்மிய்யா, இன்று வேடிக்கையான துண்டுப்பிரசுரத்தை காற்றில் வீசியிருக்கின்றது.

பகிரங்கமாக “கத்து” அடிக்கப்பட வேண்டிய அசாத்சாலியினதும், அவரது கூட்டாலிகளினதும் கைக்கூலியாக இயங்கும் ஜம்மிய்யாவின் நிர்வாகம் இன்று விலை போய் இருப்பது வேதனையும் வெட்கமுமே!

இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கட் போட்டிக்கும், பீ.ஜே.யின் வருகைக்கும் துண்டுப்பிரசுரம் வெளியிடும் ஜம்மிய்யாவுக்கு, நிகர் இலங்கையில் வேறு எந்த இயக்கமும் கிடையாது.

நீங்கள் அடித்து வெளியிட்டிருக்கும் இத்துண்டுப்பிரசுரம், நாளை பேரினவாத இயக்கங்களிடம் சென்று, இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தீவிரவாத சந்தேகங்களை தோற்றுவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஓர் இரத்ததான ஏற்பாடு செய்வதற்கு ஜம்மிய்யாவுக்கு முடியாது!

மாற்றுமத மக்கள் மத்தியில் இஸ்லாம் பற்றி எழும் தப்பபிப்பிராயங்களுக்கு பொதுவான மேடையமைத்து விளக்கம் கொடுக்க வக்கில்லை!

இயற்கை மற்றும் திட்டமிட்ட அணர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல்கொடுக்க, உதவிவழங்க தயக்கம்!

முஸ்லிம்களின் உயிர், உரிமை, உடமைகளுக்கு ஆபத்துக்கள் ஏற்பட்ட போது, அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து பெட்டிப்பாம்பாய் படமெடுத்த உங்கள் வே(வி)சம்…

அத்தனையும் பொதுமக்களிடத்தில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இன்னுமொரு தேர்தல் வந்தால் நீங்கள் மகிந்தவையும், கோட்டாவையும் மீண்டும் ஆட்சிபீடம் ஏற உழைப்பதும் மக்களுக்கு தெட்டெத்தெளிவாகிவிட்டது.

இவ்வாறு உங்களது குட்டுக்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்நிலையில், உங்களது கபடத்தனம் பீ.ஜே யை எதிர்ப்பதில், குழப்பத்தை தூண்டிவிடுவதில் லயித்திருக்கிறது.

நாளொன்றுக்கு இந்தியாவில் இருந்து பற்பல சேகுமார்களும், அவ்லிய்யாக்களும் விமான நிலையம் ஊடாக இலங்கை வந்து, அந்நிய எம் நாட்டுப் பெண்களை தடவி, அணைத்து, பூஜித்து சத்தமில்லாமல் வேலையை முடித்துவிட்டு செல்லும் இந்த ஆசாமிகள் உங்கள் கண்களில் மட்டும் மறைவது ஏன்..?

  • யுவர் காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர், காத்தான்குடி

Published by

Leave a comment