Category: Your Kattankudy
-
காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. காத்தான்குடி டீன் வீதியில் இயங்கும் ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் தனவந்தர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவர் எஸ் எம் எம் முஸ்தபா பலாஹியின் வேண்டுகோளுக்கிணங்க 26.01.2016 அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
-
அல்வாக் கொடுத்தல்
அல்வாக்கள் பல உண்டு சொல்லவா சில இங்கு வங்கியில் போட்டால் வருசத்துக்கு தருவதை எங்கிட்ட தந்தால் இரண்டே மாதத்தில் இலாபமாய்த் தருவேன் என்று ஆசையாய் சொல்லி வாங்கி சுருட்டிட்டு போறது பெரிசாக் கொடுக்கிற பேமஷ் அல்வா.
-
டிக்கோயா பெண்: 8 கிலோ கிராம் நிறையுடைய கல்லொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது
டிக்கோயா: டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் 8 கிலோ கிராம் நிறையுடைய கல்லொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த கல் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சாய்ந்தமருது பிரதேச செயலக பாடசாலைக்கிடையில் சித்திரப் போட்டி!
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் இரண்டாம் நாள் கல்வி, உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள், இளைஞர் விவகார அமைச்சுகளுக்கான நிகழ்வு நாளாகும். இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட் பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரம் வரைதல் போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலத்தின் ஏற்பாட்டில் (26) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
-
ஞானசார கைது
கொழும்பு: பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் ஹோமாகம பொலிஸில் சரணடைந்தபோது கைதுசெய்யப்பட்டார்
-
தனது 10 மாத குழந்தை மற்றும் 7 வயது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த தாய்
கண்டி: தனது 10 மாத குழந்தை மற்றும் 7 வயது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த தாயை (33) மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர். கண்டி – கொழும்பு அதிவேக ரயிலில் குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கையிலேயே குறித்த தாய் மற்றம் குழந்தைகள் காப்பற்றப்பட்டுள்ளனர்.
-
ஸிகா வைரஸ் அமெரிக்க நாடுகளில் பரவும் அச்சம்
டொரண்டோ: சில தென்னமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸிகா வைரஸ், கனடாவையும் சிலியையும் தவிர்த்து மற்ற அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
-
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய வார நிகழ்வுகள்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சின் அறிவுறுத்தல்களுக் கமைய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக் கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டி (25) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
-
பொதுபல சேன செயலாளரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
ஹோமாகம: காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகித் எக்நெளிகொடவின் மனைவி சந்தியா எக்நெளிகொடவை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு ஹோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி காவலல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
நஞ்சானது வாழ்க்கை
கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது ஆரோக்யம் நஞ்சான பொருட்களினால் நசிகின்றது வாழ்க்கை சீனியை வெண்மையாக்க சேர்க்கின்ற பதார்த்தங்கள் பாணைப் பெரிதாக்க பாவிக்கும் தந்திரங்கள் மேனியை மினுக்குவதற்கு மிருகக் கொழுப்பு கிறீம் பூசல் வீணாக ஆரோக்கியம் விழுகின்ற காரியங்கள்
-
அண்டார்டிகாவை நடந்து கடக்க முயன்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் மரணம்
லண்டன்: அண்டார்டிகா பகுதியை யாருடைய உதவியும் இன்றி தனியாக நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த சாகச நடைபயண ஆய்வாளர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்படாமல் போனதால் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. இறந்தவரின் பெயர் ஹென்ரி ஓர்ஸ்லி. அவருக்கு வயது 55. இவர் முன்னாள் இராணுவ அதிகாரி.
-
நாமலின் தனிப்பட்ட தேவைக்குரிய விமானப் பணிப்பெண்!
கொழும்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் பணிப்பெண் ஒருவர், நாமல் ராஜபக்ஷவின் வேலைகளுக்காக விமான வேலையாட்கள் ஒன்றியத்தின் புதிய உதவிச் செயலாளராக நியமிக்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜயரத்ன/வெலியமுன விசாரணை அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜயரத்ன/வெலியமுன விசாரணையின் போது தான் பணிபுரிந்த இடத்தை விமான பணிப்பெண்ணான நித்யா சேனாநாயக்க சமரநாயக்கவினால் சரியாக விபரிக்க முடியவில்லை, தான் அலரி மாளிகையின் லங்கா கமலகொட என்ற பகுதியில் உதவி செயலாளராக பணிபுரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.