ஹோமாகம: காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகித் எக்நெளிகொடவின் மனைவி சந்தியா எக்நெளிகொடவை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு ஹோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி காவலல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரகித் எக்நெளிளிகொடா காணாமல் போனமை சம்பந்தமாக தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கு திங்கட்கிழமை ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.
அப்போது புகாரை சமர்ப்பித்திருந்த சந்தியா எக்நெளிகொடா மற்றும் ஞானசார தேரர் உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த பின்னர் நீதிபதியிடம் புதிய புகார் ஒன்றை சமர்ப்பித்த சந்தியா எக்நெளிகொடா தரப்பின் வழக்கறிஞர்கள் கலகோட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்நெளிகொடவை அச்சுறுத்தியதாக தெரிவித்தனர்.
இது நீதிமன்றத்திற்கு ஏற்படுத்திய ஒரு அவமதிப்பென்று கூறிய வழக்கறிஞர்கள் இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரங்க திசாநாயக்க, ஞானசார தேரரை கைது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Leave a comment