- ஹாசிப் யாஸீன்
சாய்ந்தமருது: விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் இரண்டாம் நாள் கல்வி, உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள், இளைஞர் விவகார அமைச்சுகளுக்கான நிகழ்வு நாளாகும். இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட் பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரம் வரைதல் போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலத்தின் ஏற்பாட்டில் (26) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சித்திரப் போட்டியில் ஸாஹிரா கல்லூரி, அல்-ஜலால் வித்தியாலயம், மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம், அல்-ஹிலால் வித்தியாலயம், விதாதா வள நிலையம், தொழிற் பயிற்சி நிலையம், இளைஞர் சேவை மன்றம், தையல் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் பங்குபற்றினார்கள்.
போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரம் 25ம் திகதியிலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment