அல்வாக்கள் பல உண்டு
சொல்லவா சில இங்கு
வங்கியில் போட்டால்
வருசத்துக்கு தருவதை
எங்கிட்ட தந்தால்
இரண்டே மாதத்தில்
இலாபமாய்த் தருவேன்
என்று ஆசையாய்
சொல்லி வாங்கி
சுருட்டிட்டு போறது
பெரிசாக் கொடுக்கிற
பேமஷ் அல்வா.
கூறிய விலையை
குறைத்தும் கேட்காமல்
பாரிய அளவில்
பல பொருள் வாங்கி
செக்கைக் கொடுத்து
செற்ல்மண்ட் செய்து
அந்தப் பொருளை
அரை விலை விற்று
வந்த பணத்துக்கு
வாகனம் வாங்கி
கொடுத்த செக்குக்கு
கோவிந்தா சொல்லல்
பரவலாய் கொடுக்கும்
பிரபல அல்வா
பேஷ் புக் கணக்கில்
Female தேடி
Friend ஆக ஆக்கி
பிரியமாய் பேசி
சற்றிங் மூலமே
‘சகலதும்’ முடித்த பின்
Unfriend செய்து
அல்வாக் கொடுத்தல்
இலக்ரோனிக் அல்வா
யாரிடம் சொல்வாய்?
கட்டார் கிங்குக்கு
கிட்டார் வாசிக்க
ஆளொன்று வேணுமாம்
அவசரம் என்று
ஆசை காட்டி
ஆசாமியை ஏற்றி
அங்கே போனபின்
கிட்டார் இல்லை
ஒட்டகம் மேய் என
ஏஜெண்டுக் காரன்
பூச்சாண்டி காட்டுதல்
இங்கே உள்ள
இன்னொரு அல்வா.
எல்லா அல்வாவும்
இங்கே இனிக்கும்
மரணத்தின் பிடியில்
கரணம் அடிக்கும
அல்லாஹ்வை அஞ்சுவோர்
அல்வாவை தவிர்ப்பார்.
- முகமட் நிஸவ்ஸ்

Leave a comment