எம்.எச். 370 விமானம் ​காணாமல் போனதன் இரண்டாம் ஆண்டு நிறைவு

mh370பெய்ஜிங்: இருநூற்று முப்பத்து ஒன்பது பயணிகளுடன் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனதன் இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் விதமாக மலேஷிய நாடாளுமன்றம் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.பெய்ஜிங்கில் ஒரு பௌத்த கோவிலுக்கு முன்பாக அந்த விமானத்தில் பயணித்த சீனர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். காணாமல் போன தங்களின் அன்பான உறவுகளைத் திரும்பிதருமாறு அவர்கள் அதிகாரிகளைக் கோரினர்.

காணாமல் போன எம்.எச். 370 விமானத்தின் பாகங்களை தென் இந்திய பெருங்கடலில் தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்லும்போது இந்த விமானம் காணாமல்போனது.

mh370

Published by

Leave a comment