தெஹ்ரான்: பல கண்டம் தாண்டும் ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்துப் பார்த்துள்ளது. அமெரிக்காவின் வற்புறுத்தலையும் மீறி இந்த சோதனைகளை ஈரான் நடத்தியுள்ளது.எவ்வித அச்சுறுத்தலையும் சமாளிக்க ஈரான் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இதேபோல சோதனைகளை ஈரான் நடத்தியதையடுத்து, ஈரானின் ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடைய தொழில்களுக்கும் தனி நபர்களுக்கும் அமெரிக்கா தடைவிதித்தது.
வளைகுடா நாடுகளில் ஈரானைத் தவிர்ந்த ஏனைய நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணிந்து செல்வது வழக்கமாகும்.

Leave a comment