பாராளுமன்ற கலகம் தொடர்பில் அறிக்கை

parliament[1]கொழும்பு: நேற்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலான அறிக்கை இன்று (04) பிற்பகல் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கை, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட குழுவால் தயாரிக்கப்பட்டு சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையை, பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்தான குழுவில் நாளை (05) காலை சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தீத் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment