UNP-NFGG முயற்சியினால் கர்பலா வீதிப்புனரமைப்பு நிறைவடைகிறது

  • NFGG ஊடகப்பிரிவு, ஓட்டமாவடி அகமட் இர்ஷாட்

rahumanபாலமுனை: UNP –NFGG யின் கூட்டிணைந்த முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலமுனை கர்பலா வீதி செப்பனிடப்படும் வேலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று (02.05.2016) நேரில் சென்று பார்வையிட்டார். பொறியியலாளர் அப்துர் ரஹ்மானோடு UNPயின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் HMM முஸ்தபா அவர்களும் இதில் கலந்து கொண்டார்.

நாளாந்தம் பல ஏழைப் பொது மக்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் கர்பலா வீதி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக படு மோசமான நிலையிலேயே காணப்பட்டு வந்தது. காத்தான்குடி வைத்திய சாலைக்குச் செல்வதற்கும், ஏனைய தேவைகளுக்குமென நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாவனை செய்யும் இந்த வீதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை இத்தனை காலமாக பொதுமக்கள் முன்வைத்து வந்தனர்.

rahuman

இருப்பினும், கடந்த ஆண்டு வரை அதற்கான எவ்வித ஆக்கபூர்வமான முயற்சிகளும் எவராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இவ்வீதியினை செப்பனிட்டு புனரமைப்பதற்காகன தீவிர நடவடிக்கைகளை காத்தான்குடி பிரதேச UNP கிளையினரும் NFGGயுன் கூட்டாக இணைந்து மேற்கொண்டது. இதில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் UNP யின் சிரேஸ்ட அமைச்சர் தயா கமகே அவர்களினால் இந்தப் புனரமைப்பு வேலைகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து பாலமுனை அலிகார் வித்தியாலய முன்னால் செல்லும் பிரதான வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைகள் கர்பலா வீதியில் ஒரு கணிசமான தூரம் வரை புனரமைக்கப்பட்டு நிறைவடைந்தன.

rahuman musthaffa

இதன் இரண்டாம் கட்ட வேலைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் மீண்டும் ஆரம்பிகப்பட்டு தற்போது நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கின்றன. இவ்வேலைகளின் முன்னேற்றத்தை பார்வையிடச் சென்ற குறித்த விஜயத்தின் போது NFGG யின் சிரேஸ்ட உறுப்பினரான ASM ஹில்மி மற்றும் செயற்குழு உறுப்பினர்களான MAM சியாட் உட்பட பாலமுனைப்பிரதேச பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக இருந்து வந்த இந்த வீதியினை

புனரமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட UNP மற்றும் NFGG ஆகிய கட்சியினருக்கு தாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக பிரதேச மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Published by

Leave a comment