மூடபட்டிருக்கும் மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதியை மக்கள் பாவனைக்குத் திறக்கக் கோரிக்கை

ramlanமூடபட்டிருக்கும் மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதியை மக்கள் நலன் கருதி விரைவாக திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் NK றம்ழான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் நாடலாவிய ரீதியில் இயங்கிவரும் 08 எட்டு ஆயுள்வேத வைத்தியசாலைகளில் மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத வைத்தியசாலையும் ஒன்றாகும் இவ்வைத்தியசாலை கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் மிகக்குறைந்த அடிப்படை வசதிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது சுமார் 06 வைத்தியர்களும் 38 ஊழியர்களுமாக மொத்தம் 44 பேர் கடமையாற்றி வருகின்றனர். அரச வைத்தியசாலைகளில் கடமைபுரியும் ஒருவர் அதிகபட்சமாக ஐந்து வருடங்களே ஒரு இடத்தில் கடமையாற்ற முடியும் என்ற சுற்றரிக்கைகள் இருந்த போதிலும் இவ்வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி தொடக்கம் இன்னும் பலர் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக இவ்வைத்தியசாலையில் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

குறித்த இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் நலன்கருதி 2014ம் ஆண்டு நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் அதே ஆண்டு இழுத்து மூடப்பட்டுள்ளது அது விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விடயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி காரணமாகவே மூடப்பட்டதாக அறிய முடிகின்றது.

ramlan

NK றம்ழான்

அதுமாத்திரமின்றி வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் சீருடைக்கான கொடுப்பனவு மற்றும் சுற்றுமதில் அமைத்தபோது அங்கிருந்த வெட்டப்பட்டு விற்பணை செய்யப்பட்ட மரங்களுக்கான நிதி அரச கணக்கில் வரவு வைக்கப்படாமை போன்ற இன்னும் பல விடயங்களில் நிதி மோசடி இடம்பெற்று இருப்பதாக ஆயுள்வேத திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்படையடுத்து அயுள்வேத திணைக்களத்தின் கணக்காய்வு அதிகாரிகள் மேற்கொண்ட காணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைகேடுகளின் விசாரணை முடிவடையும் வரை குறித்த நோயாளர் விடுதியை தற்காலிகமாக மூடுமாறு இட்ட உத்தரவின் பெயரில் மூடப்பட்ட குறித்த நோயாளர் விடுதி சுமார் 15மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த நோயாளர் விடுதி மூடப்படுவதற்கு காரணமாக அமைந்த ஆயுள்வேத திணைக்களத்தின் கணக்காய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை சுமார் 15மாதங்களுக்கு மேலாகியும் அது விடயமான உண்மைத் தன்மையடங்கிய விபரங்கள் இன்னும் வெளிவராதிருப்பதென்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாரான முறைகோடுகள் இடம்பெறுவதாகவும் அதனை தடுத்து நிறுத்தி மக்கள் விரும்பும் நல்லாட்சியை கொண்டுவரப் போவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் காலத்திலும் இவ்வாரான விரும்பத்தகாத செயற்பாடுகள் நல்லாட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே குறித்த மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத வைத்தியசாலையின் முறைகேடுகளை சுகாதார அமைச்சும் அரசாங்கமும் விசாரணை செய்து நிருவாகத்தை சீர் செய்வதுடன் மூடப்பட்டுள்ள நோயாளர்

விடுதியை மிக விரைவாக திறுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்மந்தமான முறைப்பாடுகளை விசாரணை செய்த ஆயுள்வேத திணைக்களத்தின் கணக்காய்வு அதிகாரிகளின் கணக்கறிக்கையில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் நிதி மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கையை துரிதப்படுத்தி அது சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சுற்றரிக்கைகளுக்கு மாறாக மிக நீண்ட காலமாக ஐந்து வருடங்களுக்கு மேலாக

இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் அதிகாரிகள்ரூபவ் ஊழிகளை இடமாற்றம் செய்து இக்குறித்த வைத்தியசாலையின் சிறந்த பணியினை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s