பூச்சாடிகளை அகற்றும் ஷிப்லி பாரூக்கின் தீர்மானத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கைகோர்ப்பு..!! (காணொளி)

  • ஓட்டமாவடி அகமட் இர்ஷாட், M.T. ஹைதர் அலி

shiblyகாத்தான்குடி: பிரதான வீதிகளில் அண்மை காலமாக அதிகரித்துவருகின்ற விபத்துக்கள் சம்பந்தமாக அதீக கரிசரணையுடன் செயற்பட்டு வந்த பொறியியலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக்கினால் ஏற்பாடு செய்திருந்த மிகமுக்கிய கலந்துரையாடல் ஒன்று கடந்த மாதம் 2016.04.19 செவ்வாய் கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸார், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன், காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எஸ்.எம். ஜாபிர் பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த கலந்துரையாடலில் மிக விரைவில் அதிகளவான வீதி விபத்துக்களை குறைப்பதற்கான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், மிக விரைவில் வீதி விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற பிரதான வீதியில் உள்ள மஞ்சல் கடவைகளுக்கு அண்மையில் அமைக்கப்பட்டடுள்ள பூச்சாடிகளை உடனடியாக அகற்றுவது என்ற தீர்மாணம் எடுக்கப்பட்டு அத்தீர்மானம் முக்கிய தீர்மானமாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்படிருந்தது. அத்தோடு தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையானது மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்கிற்கு பிரதியிடப்பட்டு அதன் பிரதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், காத்தான்குடி நகர சபையின் செயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, ஆகிய முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

shibly

இதன் பிரகாரம் அடுத்த நாள் 20.04.2016 புதன் கிழமை காத்தன்குடி நகர சபை ஊழியர்கள் குறித்த வீதி விபத்திற்கு காரணமாக அமைந்துள்ள பூச்சாடிகளை அகற்ற முற்பட்ட வேலையில் ஒரு சிலரால் தடுக்கப்பட்டு அச்சுருத்தப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக சிரேஸ்ட்ட பொலிஸ் அத்திகட்சகர்க்கு பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கினால் அறிவிக்கப்பட்டிருந்தனை தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொறுப்பதிகாரியினால் உடனடியாக குறித்த மஞ்சல் கடவைகளுக்கு அருகாமையில் உள்ள பூச்சாடிகளை அகற்றுமாறு காத்தான்குடி நகர சபை செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதோடு ஏற்கனவே எடுக்கபப்ட்ட தீர்மானத்தின் பிரதியும் அனுப்பி வைக்கப்பட்டது. அத்தோடு அதன் பிரதியானது பொறியியலாளர் ஷிப்லி பாரூகிற்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் காத்தான்குடி நகர சபையானது குறித்த பூச்சாடிகளை அகற்றுவதற்கான எந்த நடவடிகையினையும் எடுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே நகர சபை ஊழியர்கள் பூச்சாடிகளை அகற்ற முற்பட்ட வேலையில் ஒரு சிலரால் அச்சுருத்தப்பட்டிருந்தமையாகும்.

இந்த நிலையிலே கடந்த 22.04.2016 வெள்ளிக்கிழமை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம் பெற்ற பொழுது மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் குறித்த பூச்சாடிகளினால் ஏற்படுகின்ற விபத்துக்கள் சம்பந்தமாக தெளிவுபடுத்திய வேலையில், இராஜாங்க அமைச்சர் குறித்த பூச்சாடிகள் பல்லாயிரக்கணக்கான அரசாங்க நிதியினை செலவு செய்து அமைக்கப்பட்டுள்ளமையினால் அகற்ற முடியாதென மறுத்துரைத்தார். ஆனால் தொடர்ந்து தனது கருத்தினை வெளியிட்ட பொறியியலாளர் ஷிப்லி பாரூக் இதனால்தான் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம் பெறுவதாகவும், தாமதிக்கின்ற ஒவ்வொரு வினாடியும் மக்கள் விபத்துக்களையே சந்திக்க நேரிடும் என்ற கருத்தினையும் வளியுறுத்தினார்.

அத்தோடு நகர சபைகள் அனைத்தும் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருந்தும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் பிரதேசத்தினை மையப்படுத்தி தேசியத்திலே இருக்கின்ற இராஜாங்க அமைச்சரை கெளரவ படுத்துகின்ற வகையிலும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் வீதி போக்குவரத்து பொலீஸ் பொறுப்பதிகாரியினால் பூச்சாடிகளை அகற்றுமாறு தனக்கு அறிவிக்குமாறு வேண்டியதற்கு அமைவாக பூச்சாடிகளை அகற்றுவதற்கான தேவைப்பட்டினை தெளிவுபடுத்தும் கடிதத்தினை இராஜாங்க அமைச்சருக்கு அனுப்பிவைக்குமாறு காத்தான்குடி பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொறுப்பதிகாரியிடம் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கினால் வேண்டுகோல் விடுக்கப்பட்டிருந்தது. அதனால் இராஜாங்க அமைச்சருக்கு வீதி போக்குவரத்து பொறுப்பதிகாரியினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அதன் பிரதியானது பொறியியலாளர் ஷிப்லி பாரூகிற்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதன் காரணமாக மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர் என்ற வகையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் குறித்த மஞ்சல் கடவைகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளை அகற்ற முயற்ச்சி எடுக்கப்பட்டது சம்பந்தமான செய்திகள் இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையானது வரவேற்கதக்க விடயமாக இருக்கின்றது. மேலும் வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக காத்தான்குடி பிரதான வீதியில் யூ வளைவுகளுக்கு அருகாமையில் நடப்பட்டுள்ள பேரீச்சம் மரங்களையும் அகற்றுவதற்கு இராஜாங்க அமைச்சரினால் முயற்ச்சி எடுக்கப்படுமானால் இன்னும் வரவேற்க்கதக்க விடயமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s