Category: Your Kattankudy
-
சர்வதேச அளவில் தாக்கம் செலுத்தக்கூடிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று!
அமெரிக்க அரசியல் ஓர் பார்வை.. கடந்த 18 மாதங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னணி வேட்பாளர்களான ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா மற்றும் குடியரசு கட்சியின் மிட் ரொம்னிக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அண்மைய கருத்துக் கணிப்புகளில் இருவரும் சரிசமமான அளவில் ஆதரவை பெற்றுள்ளதால் தேர்தல் முடிவுகளில் இழுபறியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
-
51,420 பயிற்சி பட்டதாரிகளுக்கு அடுத்த ஆண்டு நிரந்தர நியமனம்
பயிற்சிப்பட்டதாரிகள் என்ற ரீதியில் அரச துறையில் தற்போது பயிற்சி பெற்றுவரும் 51,420 பட்டதாரிகளுக்கும் அடுத்தாண்டு நிரந்தர நியமனங்கள் பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது. அபிவிருத்தி அதிகாரிகள் சேவையாப்பின் பிரகாரம் இவர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
-
AK 47
-MJ துப்பாக்கி என்றால் அனைவராலும் மறக்க முடியாத ஓர் ஆயுத தளபாடமே ஏ.கே 47 எனும் இயந்திரத் துப்பாக்கியாகும். ஐக்கிய சோவியத் யூனியன் (USSR) என்ற பிரமாண்டமான வல்லரசு நாட்டின் ‘அப்டோமட் கலஸ்னினோவோ‘ (Avtomat Kalashnikova /Автомат Калашникова) என்பவரால் ஏ.கே 47, இலக்குத்தவறா இயந்திரம் என அழைக்கப்படும் இத்துப்பாக்கி வடிவமைப்பதற்கு (Designing) திட்டமிடப்படுகிறது.
-
சுகாதாரசேவை ஊழியர் நியமனம்
அரச சுகாதார சேவையில் பணிபுரிவதற்காக புதிதாக ஐயாயிரம் பேரை இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிலருக்கு இன்று நியமனக் கடடிதங்களை வழங்கினார்.
-
வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
yourkattankudy.team எமது இணையத்தளமான YOURKATTANKUDY ” உங்கள் காத்தான்குடி” உடன் இனணந்திருந்து எமக்கு பல வழிகளிலும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் பல இதயங்கள் இருமனம் இணையும் திருமண பந்தத்தினுள் இப்புனித துல் ஹஜ்மாதத்தினில் இனணந்து கொண்டுள்ளனா். அல்ஹம்துலில்லாஹ்.
-
க.பொ.த(உ.த)பெறுபேறுகள் ஜனவரி மாத இறுதியில்!
2012ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் என்.ஜே.புஷ்ப குமார தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் இரண்டாம் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது எதிர்வரும் இம்மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கூறினார்.
-
மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையம்: பொன்விழா ஒரு பார்வை
இலங்கையில் முஸ்லிம் அநாதைப் பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிலையமான மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையம் அரை நூற்றாண்டைக் கடந்து தனது பொன்விழாவை அண்மையில் கொண்டாடியது.
-
பாலா் பாடசாலை விளையாட்டு விழா.
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி அன்வா் டவுன் பாலா் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா (04.11.2012 ஞாயிற்றுக்கிழமை) இன்று புதிய காத்தான்குடி மட்/மம.அன்வா் வித்தியாலய பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
-
அல்-சகீனா புதிய பள்ளிவாயல்…
விசேட செய்தியாளர். மாண்புமிகு பிரதியமைச்சா் AL-HAJJ-MLAM.HIZBULLAH MA/MP இன் முயற்சியில் HIRA FOUNDATION இன் ஏற்பாட்டில் 5 வது மஸ்ஜித்திற்கான அடிக்கல் காத்தான்குடி டீன் வீதியில் ( 04.11.2012 ஞாயிறு ) இன்று காலை 06.30 மணிக்கு நடப்பட்டது. இப்புதிய பள்ளிவாயலுக்கு அல்-சகீனா… எனப் பெயரிடப் பட்டுள்ளது. மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சா் AL-HAJJ-MLAM.HIZBULLAH MA/MP , கிழக்கு மாகாண சபை உறுப்பினா் பொறியிலாளா் சிப்லி பாறுக் , உலமாக்கள்…
-
மாமனிதரின் மரண அறிவித்தல்
நமது செய்தியாளர். பிரபல சமூக சேவையாளா், காத்தான்குடியின் வரலாற்றில் சரித்திரம் படைத்த மாமனிதரும், மற்றும் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலின் ஆயுட்கால தலைருமான ஆலிம் அல்.ஹாஜ். ஏ.எம்.மீராசாஹிபு JP (ஆ.மா.ஹாஜியார்) அவா்கள் தனது 97 வது வயதில் (04.11.2012 ஞாயிறு) காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன். அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகையின் பின்னா் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் தொழுவிக்கப்பட்டு அப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.
-
கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்: ICC அங்கீகாரம்
நீண்ட காலமாக ஆலோசித்து வந்த கிரிக்கெட் போட்டிகளில் சில மாற்றங் களை கொண்டு வரும் தீர்மானத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. முக்கியமாக டெஸ்ட் போட்டிகளை பகலிரவுப் போட்டியாக நடத்துவது, நடுவரின் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்வது போன்ற தீர்மானங்களுக்கு ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்துள்ளது.
-
அன்புள்ள ஹலால் நுகா்வோரே
டீன் பைரூஸ். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பாரிய முயற்சியால் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தின் உயா் இலக்கை அடைய HALAAL DIRECTORY 2012-13 என்ற பெயரில் மிகவும் பிரயோனம் அளிக்கக் கூடிய அளவில் மிகத் தெளிவான புத்தகத்தினை வௌயீடு செய்துள்ளனா். ஹலாலான உணவு உண்டு சுவனத்தை அடைய ஆசைப் படுபவா்கள் அவசியம் வாங்க ணே்டிய , படிக்க வேண்டிய நுாலாகும்