Category: Your Kattankudy
-
‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை!
-MJ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் திரைகளிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டு, உலக முஸ்லிம்களின் எதிர்ப்பைப் பெற்று பின்னர் திரை இறக்கப்பட்ட ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ எனும் படத்தின் தயாரிப்பாளர் யூசுப் யிற்கு ஒருவருட சிறைத் தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.
-
தம் மீதான ஊழல் புகார்களுக்கு இலங்கை தலைமை நீதிபதி மறுப்பு
இலங்கைத் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவரின் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். கொழும்பில் இருந்து செயல்படும் நீலகந்தன் மற்றும் நீலகந்தன் என்ற சட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைமை நீதிபதி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தேசிய வளர்ச்சி வங்கியில் மட்டுமே கணக்கை வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
நற்குணம்
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : ”ஹுஸ்னுல் குலுக்” நற்குணம் என்றால் என்ன? என்பதற்கு அப்துல்லாஹ் பின் முபாரக்(ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்ததாக இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ”நற்குணம் என்பது, முகமலர்ச்சி, நன்மைகளை பரவச் செய்தல், பிறரை நோவினை செய்வதை தவிர்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளாகும். (ரியாளுஸ் ஸாலிஹீன்) நற்குணத்திற்கு இஸ்லாத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மனிதர்களை அதிகம் சுவர்க்கத்தில் நுழைவிக்கக்கூடியது நற்குணமாகும்.
-
புதிய நிர்வாக சபை தெரிவு
விசேட நிருபா். புதிய காத்தான்குடி பெரிய ஜீம்ஆ பள்ளிவாயலின் தற்போதைய நிர்வாக சபை எதிர் வரும் 17.11.2012 அன்று களைக்கப்பட்டு புதிய நிர்வாக சபை எதிர் வரும் 09.12.2012 இல் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதன் தலைவா் AL.HAJ.MLM.MAHROOF. தெரிவித்தார். அல்லாஹ்வின் இல்லமாகிய மஸ்ஜிதுக்கு மிகவும் தகுதியானவர்களை தெரிவு செய்வது ஒவ்வொரு மஹல்லா வாசிகளின் பொறுப்பாகும் எனவும் மிக வினயமாக கேட்டுக் கொண்டார்.
-
விசேட தேவையுடைய மாணவா்களின் சிறப்புக் கண்காட்சி
டீன் பைரூஸ். காத்தான்குடி மட்/மம.ஸாஹிறா விசேட பாடசாலையில் விசேட தேவையுடைய மாணவா்களின் ஆக்கத்திறன்களை வெளிப் படுத்தும் முகமாக கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பபினால் நடாத்திய சிறப்புக் கண்காட்சி (08.11.2012 வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தினில் இடம் பெற்றது.
-
எங்களாலும் முடியும் என்பதனை காட்டுகிறார்கள்.
டீன்பைரூஸ். சிறுவா்கள் மீது இரக்கம் காட்டுவது, அனாதைகளை ஆதரிப்பது எல்லாம் அன்னலார் காட்டிய அழகிய வழிமுறையாகும். 08.11.2012 வியாழக்கிழமை காத்தான்குடி மட்/ஸாஹிறா விசேட பாடசாலையின் விசேட தேவையுடைய மாணவா்களின் ஆக்கத்திறன்களை ஊக்கப் படுத்தும் முகமாக நடாத்தப்படவிருக்கும் கண்காட்சி இன்று இடம்பெற இருக்கின்றது.
-
வீதியில் வீசி எறியப்பட்ட கிழங்குச் சட்டி…
விசேட நிருபா். புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் KP. மஹ்மூது லெப்பை என்பவரின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள (HOSTEL ROAD JUNCTION) தெளபீக் டேஸ்ட் கடை யினுல் வீதியால் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் வந்த கொண்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவா் கட்டுப்பாட்டை இழந்து மேற்படி டேஸ்ட் கடையின் முன் பகுதினை உடைத்துக் கொண்டு விழுந்துள்ளார். இதனால் டேஸ்ட்கடை சேதமானதுடன் மேற்படி நபா் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு பேதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .
-
கிழக்கு மாகாண சபையின் அமா்வு
விசேட நிறுபர். கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமா்வு ( 06.11.2012- செவ்வாய்க்கிழமை) உத்திய புர்வமாக கௌரவ தவிசாளா் ஆரியவதி WGM. கலப்பதி தலைமையில் நடை பெற்றது. இன்றைய அமா்வில் கொளரவ அமைச்சா்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பிணா்கள், என பலரும் பங்கேற்ற நிலையில்…
-
காத்தான்குடியில் நடமாடும் சேவை
டீன் பைரூஸ். “ தயட்ட கிருல ” தேசத்தக்கு மகுடம் – 2013 கண்காட்சியை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை (07.11.2012 புதன்கிழமை) இன்று காலை 09.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தினில் பிரதேச செயராளா் MR.SH.முஸம்மில் SLAS தலைமையில் இடம் பெற்றது.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: ஓபாமா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு!
-MJ ஒபாமா 50% 54,151,648 வாக்குகள்
-
மகத்தான வரவேற்பு
டீன் பைரூஸ். கிழக்கு மாகான சபையின் சம்பிரதாய புர்வமான இரண்டாவது ஆரம்ப வைபவம் (06.11.2012 -செவ்வாகிழமை ) இன்று காலை 09.30 மணிக்கு கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலகத்தில் கௌரவ தவிசாளர் ஆரியவதி WGM கலப்பத்தி தலைமையில் நடை பெற்றது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப் பதிவு துவங்கியது
அமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிக அதிகமான பிரச்சார செலவுகளுடன் நடக்கின்ற அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு ஆரம்பித்துள்ளது. மாதக்கணக்கில் பிரச்சாரங்கள் நடந்திருந்த நிலையில், இருவேட்பாளர்களுக்கும் இடையே ஆதரவில் சற்றுதான் வித்தியாசம் என்று கருத்துக் கணிப்புகள் காட்ட போட்டி மிகக் கடுமையாகவுள்ளது.