Category: Your Kattankudy
-
புதிய மாணவா்கள் அனுமதி
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி மட்/மம/பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் 2013 ம் ஆண்டுக்கான புதிய மாணவா்கள் அனுமதி (03.11.2012 சனிக்கிழமை ) இன்று காலை 09.00 மணிக்கு கல்லுாரி மண்டபத்தில் பாடசாலை அதிபா் MMM.YOONUS. JP தலைமையில் இடம் பெற்றது.
-
தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-
சிறார் தொழிலாளர்கள் பற்றி MLAM.ஹிஸ்புல்லாஹ்
BBC இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் அரசிடம் இல்லை என்று சிறார் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கொழும்பில் நடந்த பேரணியொன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, மலையகம் மற்றும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் வேலைக்காக கொண்டு செல்லப்படுவது தொடர்வதாக சிறார் நலத்துறை துணையமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
-
பாலா்களின் கலை நிகழ்வு
. நமது செய்தியாளர். காத்தான்குடி சிட்டி (CITY) பாலா் பாடசாலையின் பாலர்களின் கலை நிகழ்ச்சி ANNUAL CONCERT (02.11.2012) வெள்ளிக்கிழமை இன்று ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. மேற்படி பாடசாலையில் 25 க்கும் உட்பட்ட மாணவா்களே இப்பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றனர்.
-
அப்துல் ஜவாத் ஸேர் அவா்களை வாழ்த்துகின்றோம்.
பொதுப்பணி செய்திடக் கிடைப்பது புண்ணியம் பொதுப்பணி அறப்பணியாம் இதயக் களிப்புடன் அப்பணி செய்பவா்
-
கொழும்பில் ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிரசவம்
MJ கொழும்பு தனியார் ஆஸ்பத்திரியொன்றில் பெண்மணி ஒருவர் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளை நேற்று பிரசவித்துள்ளார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும்…
-
தாறுல் அா்க்கம் நிர்மாணப் பணி…….
விசேட செய்தியாளா். அல்லாஹ்வின் உதவியோடு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்-காத்தான்குடி இஸ்லாமிய வழி காட்டல் நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகளின் நிதி உதவியுடன் காத்தான்குடி
-
தாயும் மகளும் மின் தாக்கி பரிதாப மரணம்:
-MJ மடவளை பஸார், திக்கின்ன பிரதேசத்தில் சற்றுமுன் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயதுடைய தாயும் அவரது 20 வயதுடைய திருமணமான மகளும் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர்.
-
தலைமை நீதிபதியை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் சபாநயகரிடம் அளிப்பு
(தலைமை நீதிபதி தனது கனவருடன்) இலங்கையின் தலைமை நீதிபதி மீது குற்றஞ்சாட்டி, அவரை பதவியில் இருந்து அகற்ற வழி செய்யும் தீர்மானம் ஒன்றை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதிக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் என்ன என்பதை அரசு விளக்கவில்லை.
-
வாழ்த்து இதழ் வரும்….. காத்திருங்கள்…………..
டீன் பைறுஸ். காத்தான்குடியி்ன் மூத்த கல்விமானும், மக்களுக்காக சேவை செய்து வருபவருமான சட்டத்தரணி அல்.ஹாஜ் ஏ.எல்.அப்துல்ஜவாத் (BA/LLB) அவா்களை கௌரவிக்கும் முகமாக காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய இஸ்லாமிய முன்மாதிரி பாடசைலையினதும் , அல்குா்ஆன் மனனப் பிரிவினதும் 03 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் 28.10.2012 அன்று கவிமணி அல் ஹாஜ். MHM புஹாரி (பலாஹி)BA அவா்களால் எழுதி, வாசித்து வழங்கப்பட்ட அழகிய வாழ்த்து இதழ் மிக விரைவில் உங்கள் பார்வைக்காக எதிர் பாருங்கள்…………..
-
ஜனாஸா அறிவித்தல்.
குல்லு நப்சின் தாயிகதுல் மௌத். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும் என்ற அல்குா் ஆனின் உபதேசத்திற்கேற்ப காத்தான்குடி,காங்கயனோடை, சின்ன மரைக்கார் லேனைச் சோர்ந்த அல்.ஹாஜ். அல்லா பிச்சை அப்துல் மஜீட் 31.10.2012 புதன் கிழமை இன்று பி் .ப .04.00 மணிக்கு காலமாணார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்)