Author: yourkattankudy.com
-
5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி
கொழும்பு: 5 வயது முதல் 16 வயது வரையான சகல பிள்ளைகளுக்கும் கல்வியினை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோரை தண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும் எனவும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.
-
நிதாஉல் கைர் நிறுவனத்தின் அனுசரணையுடன் மீள நிர்மாணிக்கப்பட்ட ஸகீனத் பள்ளிவாயல் திறந்து வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி டீன் வீதியில் போதிய வசதிகளின்றி காணப்பட்ட மஸ்ஜிதுஸ் ஸகீனத் பள்ளிவாயல் ஸ்ரீலங்கா ஹிறா பெண்டேஷனின் ஏற்பாட்டில் நிதாஉல் கைர் நிறுவனத்தின் அனுசரணையுடன் மீள நிர்மாணிக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-
‘அமெரிக்க நிலைப்பாட்டினால் இலங்கை இராணுவ தளபதிகளுக்கு சிக்கல்’
கொழும்பு: இறுதிப் போரின்போது படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவப் படையணிகள் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள கடுமையான நிலைப்பாட்டினாலேயே, தமது இராணுவ அதிகாரிகள் அமெரிக்க இராணுவ நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் இருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.
-
தாருல் ஹதீத் 11வது தௌறாஹ் நிகழ்வின் பரிசளிப்பு வைபவம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தாருல் ஹதீத் நிறுவனத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கான இலவச ஒரு வார கால கற்கை நெறிகள் அடங்கிய 11வது வதிவிட செயலமர்வொன்று (தௌறாஹ்) காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் இம்மாதம் கடந்த 15ம் திகதியிலிருந்து இன்று வரை சுமார் 07 நாட்கள் நடைபெற்றது.
-
காத்தான்குடியில் மின் தாக்கி ஒருவர் பலி
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி ஹக்குப்பிள்ளை லேனில் இன்று புதன்கிழமை தச்சு வேலை செய்து கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா (வயது 52) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
-
‘இனவாதமும், மதவாதமும் ஒரு போதும் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லை’ – றிசாத் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இனவாதமும், மதவாதமும் ஒரு போதும் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லையென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் எந்த சமூகத்தையும் அடக்கி ஆளும் அதிகாரம் இம்மண்ணில் எவ்வாறுக்கு வழங்கப்படவில்லையென்று கூறினார்.
-
கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலுவலகம் மீது தாக்குதல்
கண்டி: கல்ஹின்னையில் அமைச்சர் ரவூப் ஹகீமினால் திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அலுவலகம் மீது நேற்று தாக்குதல் ஒன்று நடந்ததாக கண்டி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் தெரிவித்தார்.
-
மனித உரிமை பயிற்ச்சிப்பட்டறை
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களான கிண்ணியா, குச்சவெளி, மூதூர் மற்றும் பட்டிணமும் சூழலும் கிராம சேவை உத்தியோகத்தர், மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் ‘மனித உரிமை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும்
-
மராட்டியத்தில் பில்லி சூனியம், மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம்
டெல்லி: இந்தியாவின் மராட்டிய மாநிலம் பில்லி சூனியம் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்துள்ளது. அம்மாநிலத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்த செயற்பாட்டாளர் நரேந்திர டாபோல்கர் நேற்று-செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
-
எகிப்து நீதிமன்றம் உத்தரவு: ஹொஸ்னி முபாரக் விடுதலை!
– MJ கெய்ரோ: சிறைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் எகிப்தின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை எகிப்தின் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் செயற்படும் நீதிமன்றம் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. எனினும், அவரின் விடுதலை நிபந்தனைக்குட்பட்டது என நீதி மன்றம் தெரிவித்திருக்கின்றது.
-
சிரியாவில் இரசாயன குண்டு வீச்சு; நூற்றுக்கு மேற்பட்டோர் பலி
டமஸ்கஸ்: சிரியாவில், தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக எதிரணி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கிளர்ச்சிப் போராளிகள் மீது நடந்துவரும் கடுமையான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இரசாயன வெடிபொருட்கள் அடங்கிய ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்தில் 75 பேர் பலி!
– OiT மனிலா: பிலிப்பைன்ஸில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள சிபு துறைமுகத்தில் எம்.வி. புனித தோமஸ் அக்வினாஸ் என்ற சொகுசு கப்பல் சல்பிசியோ எக்ஸ்பிரஸ் சீடே என்ற சரக்கு கப்பல் மீது கடந்த வெள்ளிக்கிழமை மோதியது.