டமஸ்கஸ்: சிரியாவில், தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக எதிரணி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கிளர்ச்சிப் போராளிகள் மீது நடந்துவரும் கடுமையான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இரசாயன வெடிபொருட்கள் அடங்கிய ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நச்சுப் புகை வீச்சுக்கு உள்ளாகியே மக்கள் இறந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
சிரியாவில் ஏற்கனவே இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஐநாவின் கண்காணிப்பாளர்கள் கடந்த ஞாயிறன்று அங்கு சென்றனர்.
தற்போது இராசயனக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் ஐநா கண்காணிப்பாளர்களை திசைதிருப்பும் முயற்சி என்றும் சிரியாவின் அரச ஊடகம் கூறுகிறது.
இதேவேளை, சிரியா விவகாரம் தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், சம்பவ இடங்களுக்கு விசாரணையாளர்கள் செல்ல உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அரபுலகமும் இதே கோரிக்கையை சிரியாவிடம் விடுத்துள்ளது.
-BBc
![130821100812_syria_chemical_1_304x171_reuters_nocredit[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/130821100812_syria_chemical_1_304x171_reuters_nocredit1.jpg?w=304&h=171)
Leave a comment