எகிப்து நீதிமன்றம் உத்தரவு: ஹொஸ்னி முபாரக் விடுதலை!

Hosni_Mubarak_ritratto[1]– MJ

கெய்ரோ: சிறைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் எகிப்தின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை எகிப்தின் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் செயற்படும் நீதிமன்றம் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. எனினும், அவரின் விடுதலை நிபந்தனைக்குட்பட்டது என நீதி மன்றம் தெரிவித்திருக்கின்றது.

85 வயதையுடைய ஹொஸ்னி முபாரக், 2011 இல் எகிப்தில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, கொலைக்குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

எகிப்தில் மொர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், இடைக்கால அரசாங்கத்துக்கும் இடையிலான போராட்டங்கள் தொடர்ந்துவரும் இந்நிலையில் முபாரக்கின் விடுதலை பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரியவருகிறது.

Published by

Leave a comment