Author: yourkattankudy.com
-
பஸ் டிப்போக்களுக்கான புதிய பஸ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பஸ் டிப்போக்களுக்கான புதிய பஸ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரன்ஜித் மத்துமபண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த பஸ் வண்டிகளை டிப்போ முகாமையளார்களிடத்தில் கையளித்தார்.
-
தெரியாமல் செய்த தவறுக்காக சிறை தண்டணை அனுபவிக்கும் மட்டக்களப்பு சித்தாண்டி யுவதி
எம்.எஸ்.எம். நூர்தீன் சித்தாண்டி: அனேகரின் வாழ்வில் சோகமான சம்பவங்கள் ஏற்படுவதுண்டு ஆனால் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி தனது வாழ்வில் இவ்வாறான கொடூரமான சோகம் இடம் பெறுமென கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை.
-
காலிறுதிப் போட்டியைத் தீர்மானிக்கும் முக்கிய போட்டி: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்
அடிலெய்ட்: உலகக் கிண்ணக் கிரிகெட் சுற்றுப் போட்டியின் 42வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று போட்டியிடுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
-
நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு
கொழும்பு: ஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராகவும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக பாரியளவில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு அறிவித்துள்ளது.
-
ஏறாவூர் பள்ளிவாயல் காணிப் பிணக்கும் அறிவித்தலும்
கீழ்வரும் விபரமுடைய காணிக்கான உரிமை கோர தகுதி உள்ளவர்கள் தங்கள் உரிமைகளை வெளிப்படுத்துவதற்காக கோரப்படும் விளம்பர பத்திரம் இதன் சகலருமறிக ,கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிட்கும் ஏறாவூர் -01கிராமம் 190இலக்க கிராம சேவகர் பிரிவிட்கும் ஏறாவூர் நகர சபை வட்டார இலக்கம் -04 தைக்கா வீதியில் சோலை வரி இடாப்பில் இலக்கம் 62,64 இல் பதியப்பட்டதுமான மகுமூதுலெவ்வை உதுமாலெவ்வை எனும் பெயருடையவரது காரணியாகும்.
-
“கிழக்கு மாகாண ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கும் அபிவிருத்திற்கும் இந்தியா உதவும்”: ஹரீஸ் எம்.பி
– ஹாசிப் யாஸீன் கொழும்பு: கிழக்கு மாகாண ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கும் கிழக்கின் அபிவிருத்திற்கும் இந்தியா என்றும் பக்கபலமாக இருக்குமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
-
‘தொழுகையும் அதன் முக்கியத்துவமும்’, ஸனாஇய்யாவில்
டோஹா: இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.
-
பின்தங்கிய பாடசாலைக்கு கல்வி உதவிகளை வழங்குகிறது NFGG
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: மிகவும் பின்தங்கிய புதிய காத்தான்குடி கைராத் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சைக்கு இலகுவாக முகங்கொடுக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் பயிற்சி வகுப்புக்களை நடாத்த NFGG முன்வந்துள்ளது.
-
இந்தியாவில் கன்னியாஸ்திரி மீது கூட்டாக பாலியல் வல்லுறவு
கல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை காலையில், ஒரு வயதான கன்னியாஸ்திரி 6 பேரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் கான்வெண்ட் பள்ளிக்கூடம் ஒன்று சூறயாடவும் பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அந்த ஆட்கள் முதலில் பள்ளிக்கூடத்தில் இருந்த பணத்தை களவாடிவிட்டு, பின்னர் அந்த கன்னியர் மடத்தினுள் நுழைந்ததாக கல்கத்தாவுக்கான பேராயர், தோமஸ் டி சொய்ஸா .
-
மஹிந்தவின் பிடியிலிருந்து இந்த நாட்டை முஸ்லிம்கள் மீட்டார்களா….?
காத்தான்குடி: கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் இந்த நாட்டில் சொல்லொண்ணா துயரத்தில் சிக்கியிருந்தார்கள். முஸ்லிம்கள் வர்தக பொருட்களை இறக்குமதி செய்கின்ற போது சுங்கவரி அதிகமாக விதிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்கள். இதனால் முஸ்லிம்கள் சிங்களவர்களின் பெயரிலேயே பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலமைக்கு தள்ளப்படார்கள். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு எதிராக பல துன்பங்கள் பொதுபல சேனாவினரால் ஏற்படுத்தப்பட்டது.
-
தலைமன்னார் முதல் கொழும்புக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா தலைமன்னார்: கடந்த 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னார் முதல் கொழும்புக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்ட்டது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையினை தலைமைன்னார் துறையிலிருந்து உத்தியோக பூர்வமான ஆரம்பித்து வைத்தார்.
-
‘வீட்டுத் திட்ட வினியோகத்துக்கான விசேட செயற்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்’: இந்தியப் பிரதமருக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் மகஜர்
NFGG ஊடகப்பிரிவு மன்னார்: ‘வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்ட வினியோகத்துக்கான விசேட செயற்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்’ என கோரும் மகஜர் ஒன்றினை NFGGயின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கையளித்துள்ளார்.