கீழ்வரும் விபரமுடைய காணிக்கான உரிமை கோர தகுதி உள்ளவர்கள் தங்கள் உரிமைகளை வெளிப்படுத்துவதற்காக கோரப்படும் விளம்பர பத்திரம்
இதன் சகலருமறிக ,கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிட்கும் ஏறாவூர் -01கிராமம் 190இலக்க கிராம சேவகர் பிரிவிட்கும் ஏறாவூர் நகர சபை வட்டார இலக்கம் -04 தைக்கா வீதியில் சோலை வரி இடாப்பில் இலக்கம் 62,64 இல் பதியப்பட்டதுமான மகுமூதுலெவ்வை உதுமாலெவ்வை எனும் பெயருடையவரது காரணியாகும்.
இதன் விஸ்தீரம் ஏக்கர் 03 றூட் 03 பேர்சஸ் 16 ( 3-3-16 ) இதன் எல்லைகள் வடக்கு TP-109007ம் இலக்க. TP-150400 இந்த காணித் துண்டுகள் கிழக்கு TP-15181. இலக்க காணித்துண்டு தெற்கு தெற்கு TP-175196. இலக்க TP-91432ம ் இலக்க காணித்துண்டு மேற்கு TP- 91480 இலக்க காணித் துண்டு ஆகும் இதற்குட்பட்ட உரித்துகள் சகலதும் கொண்ட காணியாகும் .
குறித்த காணியின் முன் உரித்தாளராயினும் தற்போதய உரித்தாளராயினும், பின் உரித்தைச் சேமித்து வைத்து உரித்தாளராயினும் சரி எதிர்வ௫ம் 28.03.2015ம் திகதிக்கு முன்னர் உரிய சரியானதும் காணிப்பதிவகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதியப்பட்ட ஆவணங்களுடன் நேரில் அல்லது தபாலில் உரிமை கோரிப் பெற்றுக் கொள்ளுமாறு இத்தால் அறிவித்தல் மூலம் வேண்டப்படுகின்றீர்கள்.
தவறும் பட்சத்தில் இக்காணியானது வாளியப்பா பள்ளிவாசலுக்கும்,பொதுத் தேவைக்கும் சொந்தமானது என உரிமையைப் பெற்று அதன் ஆட்சியைப் பெற்று தேவைப்படின் நீதிமன்ற ஓர் ஆணையைப் பெற்று உடமை கொண்டு உரிமையாளராக பிரகடனப்படுத்தி பதிவதற்கு தற்போது குறித்த காணியில் ஆட்சியிலுள்ள வாளியப்பா தைக்கா பள்ளிவாயல் விஷேட நம்பிக்கையாளர் ஆகிய என்னால் ஆவண செய்யப்படும் என்பதனை இத்தால் அறித்த௫கின்றேன்.
ஜே. எம். முஸ்தபா JP,
விஷேட நம்பிக்கையாளர்,
வாளியப்பா தைக்கா பள்ளிவாயல் ,
தைக்கா வீதி ,
ஏறாவூர் -01
0773736656.
Published by

Leave a comment