கல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை காலையில், ஒரு வயதான கன்னியாஸ்திரி 6 பேரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் கான்வெண்ட் பள்ளிக்கூடம் ஒன்று சூறயாடவும் பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அந்த ஆட்கள் முதலில் பள்ளிக்கூடத்தில் இருந்த பணத்தை களவாடிவிட்டு, பின்னர் அந்த கன்னியர் மடத்தினுள் நுழைந்ததாக கல்கத்தாவுக்கான பேராயர், தோமஸ் டி சொய்ஸா .
74 வயதான அந்த கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட போது, வேறு இரு கன்னியாஸ்திரிகளும், ஒரு காவலாளியும் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். மேற்கு வங்க முதலமைச்சர் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார்.
குறிப்பாக தலைநகர் டில்லி உட்பட, தேவாலயங்களின் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து சில கிறிஸ்தவ குழுக்கள் அண்மைய மாதங்களில் கோபம் வெளியிட்டிருந்தன.
Published by


Leave a comment