Author: yourkattankudy.com
-
மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ள ஜனாதிபதியும், பிரதமரும்
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளதாக பெரும்பான்மை ஊடகமொன்று கருத்து வெளியிட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என குரல்
-
கொகா கோலா அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்! அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நிறுவனம்!!
கொழும்பு: மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் கொகா கோலா நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொகா கோலா நிறுவனத்தின் கடுவெலை பிரதேச தொழிற்சாலையின் சுரங்க வழி எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக களனி கங்கையில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
தங்கக் காசுகளைத் தயாரித்து புழக்கத்தில் விடும் ஐஎஸ் தீவிரவாதிகள்
– AF-90 டமஸ்கஸ்: ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக தங்கக் காசுகள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இது அவர்கள் வெளியிட்டுள்ள புதிய காணொளி ஒன்றின் மூலம் உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய காணொளி ஒன்றை இணையத்தில் வெளியிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அந்த காணொளிக்கு “தி ரைஸ் ஓப் தி கிலாபா அண்ட் ரிடர்ன் ஓப் தி கோல்ட் தினார்” எனப் பெயரிடப் பட்டிருந்தது.
-
தேசிய அரசை அமைக்க தீர்மானித்தது ஏன்? ரணில் விளக்கம்
கொழும்பு: கட்சித் தாவலை எதிர்த்த காரணத்தினால் தேசிய அரசாங்கம் அமைக்கத் தீர்மானித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து பேரை இணைத்துக்கொண்டு ஏன் அரசாங்கம் அமைக்க முடியாது என சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். கட்சித் தாவல் தடை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் இருந்த காரணத்தினால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளவில்லை.
-
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் மூன்று முன்னாள் அதிகாரிகளை தேடி வலைவிரிப்பு
கொழும்பு: ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் மூவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படுவரென சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
-
“ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாது”: விமல் வீரவன்ச
கொழும்பு: பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி வரிசையில் அமரும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களே எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டுமே தவிர ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதி நியமனம் செய்தால் நாட்டின் பெரும்பாலான கட்சிகளின்ஜனநாயகம் சீர்குலையுமென்றும் அவர் கூறியுள்ளார்.
-
8ஆவது பாராளுமன்றம் நாளை சம்பிரதாயபூர்வ அமர்வு
கொழும்பு: இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன வரிசைகள் நிரந்தரமாக உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.
-
கிழக்கு வான்பரப்பில் விமானங்கள் தோன்றினால் மக்கள் அச்சப்பட தேவையில்லை
மட்டக்களப்பு: எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ள நீர்க்காகம் இராணுவக்கூட்டுப் பயிற்சியின்போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறக்கக்கூடும் என்றும் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இலங்கை இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார். செப்டெம்பர் 03 ஆம் திகதி நீர்க்காகம் கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது.
-
100 பேரைக் கொண்ட அமைச்சரவைக்கு ஒப்புதல்
கொழும்பு: பொதுத் தேர்தல் இடம்பெற்று 15 நாட்களைத் தொடும் இந்நேரத்தில், 45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 55க்கும் மேற்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை உள்வாங்கும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்த யோசனை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் ஒரு பகுதியாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
-
வெள்ளை வேன் படுகொலை: சடலங்கள் பலவும் மயானங்களிலுள்ள பழைய கல்லறைகளில் சூட்சுமமாக மறைத்து வைப்பு
அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன! கொழும்பு: வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை முகாமில் கடுமை யாக சித்திரவதைக்கு
-
அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: ஆணைக்குழு அமைத்து விசாரிக்க முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்
கொழும்பு: அளுத்கமையில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், சோபித தேரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் சோபித தேரரை கோட்டை விகாரையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் தலைமை யில் சந்தித்த பிரதிநிதிகள் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.