Author: yourkattankudy.com
-
நாம் எதிர்பார்த்தது இதையல்ல
மன்னார்: வடக்கு முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு கால்நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் பல இடங்களிலும் வெகுவிமர்சியாகக் கொண்டாடப்பட்டுள்ளதை நீங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் ஊடாக பார்த்திருப்பீர்கள்.
-
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர் சாய்ந்தமருது: சாய்ந்தமருதுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
-
காத்தான்குடி கல்விக் கோட்டத்தினைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு “குரு பிரதிபா பிரபா விருது – 2015”
ஏ.எல்.டீன்பைரூஸ். கொழும்பு: இலங்கைத் திருநாட்டின் மாணவச் செல்வங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதய பூர்வமாகப் பங்களிப்புச் செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு அன்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன கலந்து கொண்டார்.
-
அல் – பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா
எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: காத்தான்குடி 01ஆம் குறிச்சியை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அல் – பஜ்ர் நலன்புரி அமைப்பு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் விழாவொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
-
ஹரத்தில் பாலர்கள்
மெளலவி. எம்.ஏ.எம். மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) மக்கா: புனித ஹரம் ஷரீபினை பார்வையிடவும், கஃபதுல்லாஹ்வை தவாஃப் செய்யும் இடங்களை பார்வையிட சவூதி அரேபியாவின் ஒரு பாலர் பாடசாலை மாணவ மாணவிகள் அணியாக வந்து கஃபாவைப் பார்வை இடுவதை படத்தில் கானலாம்.
-
பனிமூட்டம் காரணமாக ஐரோப்பாவில் விமான சேவைகள் பாதிப்பு
லண்டன்: ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்தப் பனிமூட்டம் காரணமாக, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் பத்து சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.
-
விமான விபத்துக்கு வெளிப்புற காரணிகள் மட்டுமே காரணம்: மெட்ரோஜெட் நிறுவனம்
மொஸ்கோ: சினாய் தீபகற்பத்தில் தமது விமானம் விழுந்து நொறுங்கி பேரழிவுக்குள்ளானதற்கு ‘வெளிப்புற காரணிகள்’ மட்டுமே காரணம் என மெட்ரோஜெட் விமான நிறுவனம் கூறியுள்ளது.விபத்துக்குள்ளான அந்த ரஷ்ய விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.
-
ஜனாதிபதி மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென தலைமை நீதிபதி கே. ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியுமென தலைமை நீதிபதி கூறினார்.
-
ஆச்சரிய வெற்றி! ஏகே கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்கிறது
அங்காரா: துருக்கியில் ஆளும் ஏகே கட்சி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. நேற்று ஞாயிறன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆச்சரியப்படும் விதமாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுவதற்குத் தேவையான கிட்டத்தட்ட 50 வீத வாக்குகளை அக்கட்சி வென்றுள்ளது.
-
எச்.என்.டி.ஏ. மாணவர்களை கலகத் தடுப்பு பொலிசார் தாக்கிய சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது மாணவர்களை கலகத் தடுப்பு பொலிசார் தாக்கிய சம்பவத்தை கண்டித்து “பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கு ,உரிமை கோரும் மாணவர்களை தண்டிக்காதே”எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று 2 திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி
-
இந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்!
மஸிஹுதீன் இனாமுல்லாஹ் நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் செயல்பட்ட பொழுது முஸ்லிமறபுலகு இலங்கை அரசுக்கு கைகொடுத்தது.
-
“தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட அனுமதிக்க முடியாத நிலையிலேயே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்”- சிவனேசன்
எந்தத் தவறும் செய்யாத நிலையில் தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? வவுனியா: தமிழர்களின் விடு தலை போராட்டம் முடக்கப்படக்கூடாது என்கின்ற தூரநோக்கிலும் துரதிஷ்ட வசமான சூழ்நிலையிலுமே முஸ்லிம்களை வடக்கிலிருந்து புலிகள் வெளியேற்றினார்களே தவிர, முஸ்லிம்களின் காணிகளை புலிகள் பறித்தெடுக்கவில்லை யென த. தே. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் சி. சிவனேசன் குறிப்பிட்டார்.