அங்காரா: துருக்கியில் ஆளும் ஏகே கட்சி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. நேற்று ஞாயிறன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆச்சரியப்படும் விதமாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுவதற்குத் தேவையான கிட்டத்தட்ட 50 வீத வாக்குகளை அக்கட்சி வென்றுள்ளது.
கடந்த ஜூனில் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியால் பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போயிருந்த நிலையில் இந்த மீள் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.
ஏகே கட்சியின் வெற்றிச் செய்தியைத் தொடர்ந்து துருக்கி பங்குச் சந்தை விற்பனைகள் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.

அதிபர் ஏர்துவானின் தனிப்பட்ட வெற்றியாகவே இந்த முடிவை பலரும் பார்க்கின்றனர். குர்து ஆயுததாரிகளுடன் கடந்த பல வாரங்களாக நடந்துள்ள வன்முறைகளின் பின்னணியில், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாக தைய்யிப் ஏர்துவான் வாக்குறுதி அளித்திருந்தார்.
Leave a comment