டுஷான்பி: தஜிகிஸ்தானில் ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும், சுமார் 13,000 ஆண்களின் தாடிகளை தாங்கள் சமீபத்தில் மழித்துவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் அந்நிய தாக்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் நாடளாவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
பெண்களும், ஹிஜாப் எனப்படும் தலையங்கிகளை அணியக்கூடாது என்று கோரப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இந்த ஹிஜாப் அணிய ஏற்கனவே தடை இருக்கிறது.
வலுக்கட்டாயமாக தாடி மழிக்கப்பட்ட ஒருவர் தான் அவமானப்படுத்தப்பட்டது போல உணர்ந்ததாகவும், இந் நடவடிக்கை உண்மையில் தீவிரவாதமயமாதலை ஊக்குவிக்கும் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.