அமெரிக்காவை நெருங்கும் வரலாறுகாணாத பனிப்புயல்: 5 கோடி மக்கள் பாதிப்படையலாம்!

snowவாஷிங்டன்: அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை மாபெரும் பனிப்புயல் ஒன்று நெருங்குவதால் தலைநகர் வாஷிங்டனில் ஏறக்குறைய-வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் வீசவிருக்கும் இந்தப் பனிப்புயலின் காரணமாக, சில மணி நேரங்களில் இரண்டடி உயரத்திற்கு பனி பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடிப் பேர் இந்தப் பனிப்புயலின் காரணமாக பாதிக்கப்படுவார்கள்.

இந்தப் பனிப்புயலின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதோடு விமானப் போக்குவரத்தும் தடைப்படக்கூடும்.பனிப்புயலுக்கு முன்பாகவே பலரும் பொருட்களை வாங்கி குவிக்க விரும்பியதால் சுப்பர்மார்க்கெட்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். விரைவிலேயே பொருட்கள் தீர்ந்தும் போயின. இந்த மோசமான காலநிலையின் காரணமாக, வடக்கு கரோலினா மாகாணத்தில் இருவரும் டென்னிஸியில் ஒருவரும் மேரிலாண்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேரிலாண்ட், வடக்கு கரோலினா, ஜோர்ஜியா, பென்சில்வேனியா, வர்ஜீனியா, டிஸ்ட்ரிக்ட் ஓஃப் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.வாஷிங்டனில் போக்குவரத்து இந்த வார-இறுதிவரை நிறுத்தப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமையன்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

snow

சனிக்கிழமையன்று மன்ஹட்டனில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வாஷிங்டன், பால்டிமோர் ஆகிய இடங்களில் அதைவிட வேகமாக காற்று வீசுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் இதுவரை அதிகபட்சமாக 1992ல் இரண்டு நாட்களில் 28 அங்குலம் அளவுக்கு பனி பெய்திருக்கிறது.

கடந்த ஆண்டு பெய்த பனிப் பொழிவில் போஸ்டன் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை அங்கே அந்த அளவுக்குப் பனி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment