வாஷிங்டன்: அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப்புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற்கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது.பயங்கரமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
சில இடங்களில் படிந்த ஒரு மீட்டர் உயரம் வரையிலான பனி காரணமாக ரயில்களும், பஸ்களும் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. நியூயோர்க்கில் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியகம் மற்றும் திரையரங்குகள் மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. சூதாட்ட மையங்களும் மூடப்பட்டுள்ளன.

Leave a comment