WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • Emerging Hidayans அமைப்பின் சிறுவர் விளையாட்டு போட்டியும் ஒன்றுகூடலும்

    – மீராவோடை ஸில்மி மீராவோடை: “Beyond the borders” எனும் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஒரு கிளை அமைப்பான Emerging Hidayans விளையாட்டு கழகத்தின் 2 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இம்முறை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் சிறுவர்களுக்கான ஒன்றுகூடல் மற்றும் விளையாட்டு நிகழ்வொன்றை இன்று வெள்ளி (2018/04/13) காலை ஏற்பாடு செய்திருந்தது.

  • காஷ்மீர் சிறுமி: வன்புணர்வு முதல் கொலை வரை

    AF-90 காஷ்மீர்: காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது  சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது பற்றி தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 18 பக்கம் கொண்ட இதில் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கிறது.

  • சிரியாவை தாக்கினால் போர் மூளும்: ரஷ்யா

    மொஸ்கோ: சிரியாவின் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக, அமெரிக்கா வான்வழி தாக்குதல்கள் நடத்தினால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. “போர் வரும் ஆபத்தை தடுப்பதே முதன்மையான ஒன்று” என ஐ.நாவிற்கான ரஷ்ய தூதர் வசிலி நபென்ஷியா வியாழனன்று தெரிவித்தார்.

  • யாழ் நகைக்கடைகளில் திருடிய கண்டிப் பெண் கைது

    யாழ்ப்பாணம்: யாழ். நகரிலுள்ள பல்வேறு நகைக்கடைகளில் பலநாட்களாக நூதனமான முறையில் நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) பிற்பகல் யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் திருட முற்பட்டபோதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • ஓட்டமாவடியில் அலியிடம் தோற்றுப்போன ஹக்கீமும், தவிசாளர் கனவை நனவாக்கிய ஐ.ரி.அஸ்மியும்

    – ஓட்டமாவடி அஹம்ட் இர்ஷாட் ஓட்டமாவடி: கடந்த ஒரு மாத காலமாக மட்டக்களப்பு – கல்குடா, ஓட்டமாவடியில் முக்கிய பேசும் பொருளாக காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் யார் என்பதற்கான விடயத்தில் இன்று 06.04.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற முதலாவது அமர்வில் பகிரங்க வாக்கெடுப்பின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீம் கல்குடாவின் அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் சானக்கியத்தில் தோற்றுப் போய்விட்ட விடயமாக இருந்தனை…

  • முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ரணிலுக்கு இன்று ஆதரவு

    கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக  இன்று (04) இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்க தீர்மானித்துள்ளது.  நேற்று (03) இடம்பெற்ற மு.கா. வின் உயர் பீட கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த, கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

  • கோவிலாக மாறிய தஸ்கர ஹக்கானியா மத்ரஸா…?

    கண்டி: இஸ்லாமிய மார்க்கம் போதிக்கப்படும் கண்டி தஸ்கர அல் ஹக்கானியா அரபிக் கல்லூரியில் மத நல்லிணக்கம் பேனும் சர்வவமத சம்மதம் எனும் அடிப்படைவாதத்திற்கு அமைய அக்கல்லூரி மாணவர்களால் இந்துமதத்தினரையும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எம்மதமும் சம்மதம் ஏஜண்டுகளையும், அரசியல் உயர் பீடங்களையும் உச்சி குளிரச்செய்யும் நோக்கில் இந்து பூஜை இடம்பெற்ற நிகழ்வே இதுவாகும்.

  • இது நம்ம ஊரு

    வாடகைக்குக் கடைகள் இருக்கு கடைகள் வாங்கவும் ஆட்கள் இருக்கு தொழில் செய்யத்தான் ஆளில்லை இது நம்ம ஊரில! – MJ

  • குவைத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்து: 15 தொழிலாளர்கள் பரிதாபமாகப் பலி!

    குவைத்: குவைத்தில் இடம்பெற்ற பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தவேளை, எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. விபத்துப் படங்கள் உள்ளடக்கம். அனைவருக்கும் ஏற்புடையதல்ல

  • இஸ்ரேலின் தாக்குதலில் 12 பலஸ்தீனர் பலி

    காஸா: தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியின்போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பலஸ்த்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூடே அதற்கு காரணமென்றும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.

  • எகிப்தில் இடம் பெற்ற சர்வதேச குர் ஆன் போட்டியில் ஓட்டமாவடி இஸ்ஸத் ஐந்தாம் இடம்…

    ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி: ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை பிறப்பிடமாக கொண்ட அல்-ஹாபிழ் எம்.ஐ.மொஹம்மட் இஸ்ஸத் அன்மையில் எகிப்து நாட்டில் இடம் பெற்ற சர்வதேச குர் ஆன் போட்டியில் ஐந்தம் இடத்தினை பெற்று ஊருக்கும், நாட்டுக்கும் பெரும் சேர்த்துள்ளார். ஐம்பந்தைந்து நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு கொண்ட குறித்த சர்வதேச குர் ஆன் போட்டியில் இஸ்ஸத் ஐந்தாம் இடத்தினை பெற்றிருப்பதானது அவருக்கு குர் ஆன் மற்றும் மார்க்க கல்வியினை வழங்கிய வாழைச்செனை அந் நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபு…

  • புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை –2018

    மாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. மேற்படி நேர்முகப் பரீட்சை கல்லூரி வளாகத்தில் காலை 09:30 மணி முதல் நடைபெறவுள்ளது.

←Previous Page
1 … 96 97 98 99 100 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar