யாழ் நகைக்கடைகளில் திருடிய கண்டிப் பெண் கைது

jwellsயாழ்ப்பாணம்: யாழ். நகரிலுள்ள பல்வேறு நகைக்கடைகளில் பலநாட்களாக நூதனமான முறையில் நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) பிற்பகல் யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் திருட முற்பட்டபோதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த சில மாதங்களாக யாழ்.நகரிலுள்ள நகைக்கடைகளுக்குச் சென்று நகைகளைக் கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்வார். எனினும், நகைகள் எவற்றையும் கொள்வனவு செய்ய மாட்டார். அவர் அங்கிருந்து சென்ற பின் அவர் பார்வையிட்ட நகைகளிலொன்று காணாமல் போயிருக்கும். இது வழமையானதொன்றாகவிருந்து வந்தது.

இந்த நிலையில் திருட்டுப் போன நகைக்கடை உரிமையாளர்கள் உஷாரடைந்தனர். இது தொடர்பில் ஏனைய நகைக்கடைக்காரர்களுக்குக் குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் தகவல் பரிமாறி அவர்களை விழிப்படையச் செய்தனர். இந் நிலையில் குறிப்பிட்ட பெண்மணி நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் வழமை போன்று மீண்டும் தனது கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளார்.

பொலிஸார் குறித்த பெண்ணிடம் திருட்டுப் போன ஏனைய நகைகளை மீட்பதற்காகப் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

2 Responses to “யாழ் நகைக்கடைகளில் திருடிய கண்டிப் பெண் கைது”

 1. Ali Raza Says:

  what plugin are you using on your website it’s really beautiful! can you please tell me the plugin name?

  I run a website and my website looks really bad maybe because of the poor design and I want to change the look of my website.

  hope to see your answer soon.

 2. nothing Says:

  அஸ்ஸலாமு அலைக்கும்
  எமது ஊரில் மிக ரகசியமாக நடந்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவலை உங்கள் email இற்கு அனுப்பியுள்ளோம் தயவுசெய்து அந்த தகவலை பிரசுரியுங்கள்.

  இந்த குற்ற செயலில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றிய விபரங்களை நாங்கள் உங்களுக்கு மிக விரைவில் அனுப்புவோம்.

  நாங்கள் அனுப்பிய email உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் உங்கள் email இல் உள்ள spam folder இல் தேடிப்பாருங்கள்.

  அங்கும் இல்லையென்றால் எங்களுடைய இந்த comment இற்கு reply செய்யுங்கள் நாங்கள் மீண்டும் அனுப்புகிறோம்.

  எங்கள் பாதுகாப்புக்காக எங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s