Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிரியாவை நோக்கி ஏவப்பட்ட 2 ஏவுகணைகள்- மத்திய தரைக் கடலில் விழுந்தன

    – OiT டமஸ்கஸ்: சிரியா மீது இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை இரண்டுமே மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும்,  சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • சிரியா மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

    நியுயோர்க்: சிரியா மீது பெரிய அளவில் பரந்துபட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையே அமெரிக்கா மேற்கொள்ளும் என்று வெளிப்படையாக கூறப்பட்டது.

  • சிரியா நோக்கிச் செல்லும் அமெரிக்கா போர்க்கப்பல்!

    நியுயோர்க்: போர் விமானங்கள்- ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினருன் கூடிய அணு சக்தியில் இயங்கக்கூடிய அமெரிக்காவுக்கு சொந்தமான நிமிட்ஸ் போர்க்கப்பல் தற்போது செங்கடல் பகுதிக்குசென்றுக்கொண்டிருக்கிதென  அந்நாட்டு ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

  • பாகிஸ்தான் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

    கொழும்பு: பாகிஸ்தானின் திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் அஹ்சன் இக்பால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை (03) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். கொடிய யுத்தத்தை வெற்றி கொண்டதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் புகழ் சர்வதேச அளவில் ஓங்கியுள்ளதென பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.

  • நோக்கியா செல்போன் நிறுவனத்தை ரூ. 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசொப்ட்!

    – OiT ஹெல்சிங்கி:  உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் ரூ. 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன.

  • கடமையான குளிப்பை நிறைவேற்றுவது எப்படி?

    – NTJ அல்லாஹ் கூறுகிறான் ‘குளிப்புக் கடைமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 05:06). குளிப்புக் கடமையானால் அதை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். பலர், குளிப்புக் கடமையை நிறைவேற்றுவது எப்படி? என்பதை அறியாமலேயே வாழ்கின்றனர்.

  • பாலியல் சர்ச்சையில் சிக்கிய சாமியார்கள்…

    – OiT குஜராத்: இந்தியாவில் ஆசிரமங்களுக்கும், சாமியார்களுக்கும் பஞ்சமில்லை. நாடுமுழுவதும் ஏதாவது ஒரு ஊரில் அருள்வாக்கு கூறும் சாமியார்கள் பக்தர்களால் போற்றப்படுகின்றனர். சிலரது வாக்கு பலிப்பதால் அவர்களின் ஆசிரமத்திற்கு வருமானம் கூடுகிறது. சிலர் நோய் தீர்க்க சிகிச்சை செய்வதால் அவர்களும் ஆன்மீக ஞானிகளாக பக்தர்களால் போற்றப்படுகின்றனர்.

  • ‘அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ. 57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்’!

    – OiT டெல்லி:  ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்தே அதை இறக்குமதி செய்தால் ரூ. 57,000 கோடியை சேமிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

  • ‘ரெலிகிராம்’ சேவைக்கு பதில் ‘ரெலி மெயில்’ சேவை அறிமுகம்

    கொழும்பு: அரசாங்க ஊழியர்களின் லீவு மற்றும் முக்கிய தேவைகள் கருதி ரெலிமெயில் சேவை சட்டபூர்வ ஆவணமாக்கப்படுமென தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார். ஒக்டோபர் மாத இறுதியுடன் ‘ரெலி கிராம்’ சேவை முடிவுக்கு கொண்டு வரப்படுமென தொலைத்தொடர்புகள் அமைச்சு அறிவித்துள்ளமையைய டுத்தே, அமைச்சர் ரெலிமெயில் சேவையின் ஆரம் பம் குறித்து விளக்கமளித்தார்.

  • நவி பிள்ளையை சந்தித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது

    கொழும்பு: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையை சந்தித்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்ட தினத்தன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த நவி பிள்ளை, தன்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

  • வடமாகாண சபை தேர்தலில் வன்னி மாவட்ட மக்கள் அரசாங்கத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்யும் வியூகத்தை வகுத்துள்ளது- றிசாத் பதியுதீன்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: நடை பெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் வன்னி மாவட்ட மக்கள் அரசாங்கத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்யும் வியூகத்தை வகுத்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் தாராபுரத்தில் தெரிவித்தார்.

  • குளியாப்பிட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரம்

    – ஆசாத் குளியாப்பிட்டி: ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் சூராவளி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

←Previous Page
1 … 961 962 963 964 965 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar