நியுயோர்க்: போர் விமானங்கள்- ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினருன் கூடிய அணு சக்தியில் இயங்கக்கூடிய அமெரிக்காவுக்கு சொந்தமான நிமிட்ஸ் போர்க்கப்பல் தற்போது செங்கடல் பகுதிக்குசென்றுக்கொண்டிருக்கிதென அந்நாட்டு ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இக்கப்பலானது ஒரு கடற்படை பிரிவுக்கு சமமானது. தற்போது சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில்- அரபிக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிமிட்ஸ் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை பல கேள்விளைத் தோற்றுவித்துள்ளது.
இதுகுறித்து இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில்-
‘’நிமிட்ஸ் போர்க்கப்பலுக்கு குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றாலும்- தாக்குதல் நடத்த திட்டமிடும் சமயங்களில் அதற்கேற்ற வகையிலான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னேற்பாட்டுடன்தான் நிமிட்ஸ் போர்க்கப்பல் செங்கடல் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
GA
Leave a comment