WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும்

    லண்டன்: ரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும் என்பதாக பிறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைவாக அதிகமான நாடுகளில் ரமழான் நோன்பு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. 

  • ஜெருசலத்தில் தனது புதிய தூதரகத்தை திறக்கிறது அமெரிக்கா

    ஜெருசலம்: ஜெருசலத்தில் தனது புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறக்க உள்ளது. இந்நடவடிக்கைக்கு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆனால், பலத்தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த ஒன்று கூடியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் உடன் சென்றுள்ளார். இவர்களுடன் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.

  • கலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    கொழும்பு: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.

  • கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

    அகமட் எஸ். முகைடீன் கல்முனை: கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வில் கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக்கழகத்தினர்  (13) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் விளையாடவிருந்தனர்.

  • 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பதவியேற்ற 92 வயது முன்னாள் பிரதமர்- வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

    கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பொது தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் மொஹமத் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார். 92 வயதாகும் அவர், 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடித்தார்.

  • “2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாள்” – வடமாகாண சபை பிரகடனம்

    யாழ்ப்பாணம்: முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு (10)  கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் தேதியை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.

  • அமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது

    வை எல் எஸ் ஹமீட் கொழும்பு: ஜனாதிபதியின் 8ம் திகதி பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் விவாதத்தில் அமைச்சர் ஹக்கீமின் உரை மிகவும் கவலை தரக்கூடியதாகவும் அரசியல் விரக்தி நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தது. அவருடைய பேச்சின் பிரதான அம்சமாக “ ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஒரு நழுவல் போக்கினைக் கொண்டிருந்ததாகவும் ஒரு உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை;” என்றும் குறைபட்டுக்கொண்டார்.

  • உலகம் போற்றும் முகம்மட் சலாஹ்

    லண்டன்: லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகம்மட் சலாஹ், தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எகிப்தைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் பெருமையுடன் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இந்த பெருமையைப் பெற்றுள்ள முதலாவது எகிப்தியர் இவர் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.

  • கொழும்பு – புளூமெண்டல் பள்ளிவாசலை விஸ்தரிக்க உதவிகள் எதிர்பார்ப்பு

    எம்.எஸ்.எம்.ஸாகிர் கொழும்பு: கொழும்பு 15, 520/41, புளூமெண்டல் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசலில் தொழுவதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளிவாசலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எதிரே புனித ரமழான் வருகின்ற காரணத்தால் பெண்கள் தொழுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால் பள்ளிவாசலை துரித கதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

  • “வட்ஸ்அப்” இல் “Picture in Picture” (PiP) எனும் புதிய இணைப்பு

    லண்டன்: புதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வட்ஸ்அப் செயலியை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் வழிமுறையை அறிவித்தது. அதனை தொடர்ந்து “பிப் மோட் எனும்” அதன் புதியதொரு அம்சத்தையும் அறிவித்துள்ளது. பிப் மோட் என்றால் என்ன.? அதன் விரிவாக்கம் தான் என்ன.? அதன் நன்மை என்ன.? இந்த அம்சம் யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்.?

  • சவுதி இளவரசர் சுல்தானின் 50 மில்லியன் டொலர் செலவு ஆடம்பரத் திருமணம்

  • சீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம்

    எவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சீனி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த  சீனி அளவைக் குறைப்பதோடு, சீனி நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரல் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

←Previous Page
1 … 93 94 95 96 97 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar