15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பதவியேற்ற 92 வயது முன்னாள் பிரதமர்- வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

mahadir malaysiaகோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பொது தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் மொஹமத் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார். 92 வயதாகும் அவர், 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடித்தார்.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகரா அரண்மனையினுள் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோது, வெளியே கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கொடிகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பரித்தனர்.

mahadir malaysia

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும், மலேசிய பிரதமருமான நஜிப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிட தனது அரசியல் ஓய்வை விலக்கி கொண்டு மகாதீர் முகமத் தேர்தல் களமிறங்கினார்.

மகதீர் மொஹமதின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவையாகும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s