கலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

hizbullahகொழும்பு: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை Metropolitan College இன் பட்டமளிப்பு விழா கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது இராஜாங்க அமைச்சருக்கான கலாநிதி பட்டம் மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழக துணை அதிபர் Dr. Hjh. Bibi Florina Binti Abdullah மூலம் வழங்கப்பட்டது.

hizbullah

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் Metropolitan College ஊடாக Alliance International University-Zambia பல்கலைக்கழகத்தினால் இப்பட்டத்தை பெறுவதற்கு ‘ஆயுத மோதல்களில் மத்தியஸ்தம்’ எனும் தலைப்பில் 292 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.

பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

ராஜாங்க அமைச்சர் சகோதரர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எமது நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Yourkattankudy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s