சீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம்

bitter gourdஎவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சீனி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த  சீனி அளவைக் குறைப்பதோடு, சீனி நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரல் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

பாகற்காயில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. பாகற்காயில் டயட்டரி நார்ச்சத்துக்களும், இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காய் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது? பாகற்காயில் மூன்று வகையான உட்பொருட்களுடன்  சீனி நோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.

பாகற்காயில் இருக்கும் உட்பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். டைப்-2 சர்க்கரை நோய் என்பது, உடலில் முறையான செயல்பாட்டிற்குத் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள செல்கள் உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை ஏற்காமல் இருக்கும் நிலையாகும். டைப்-1 சர்க்கரை நோய் என்பது உடலில் மிகவும் குறைவான அளவில் இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது இன்சுலினை சுத்தமாக உற்பத்தி செய்யாமல் இருக்கும் நிலையாகும்.

ஜர்னல் எட்னோஃபார்மால்கியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, 4 வாரம் தொடர்ந்து 2000 மில்லிகிராம் பாகற்காயை எடுத்து வந்ததில், டைப்-2 சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் பாகற்காயில் உள்ள தாவர வகை இன்சுலின் டைப்-1 சர்க்கரை நோயாளிக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது.

பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால், தானாக இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறையும். பாகற்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்.

பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, கல்லீரலில் உள்ள நொதிகளை வலிமையாக்கி, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுக்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளிக்கும், அலர்ஜியை சரிசெய்யும் மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ராடிக்கல்களால் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் செல்கள் சீரான இயக்கத்திற்கு உதவும்.

bitter gourd

பாகற்காயில் ஆன்டி-கார்சினோஜென்கள் மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகள், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்.

பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்துவதுடன், அதிகமாக உண்பதைத் தடுக்கும் மற்றும் பசியுணர்வைக் குறைக்கும்.இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். மேலும் இதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களும் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் தான் காரணம். மேலும் பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s