Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.!

    கோலாலம்பூர்: மலேசிய நிதியமைச்சகத்துக்கு சொந்தமான கிராடில் பண்ட் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி நஸ்ரின் ஹாஷன் என்பவர் ஆவார். மேலும் அதிகாரி நஸ்ரின் ஹாஷன் ஹூவாய் மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று படுக்கையறையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் நஸ்ரின் ஹாஷன், அந்த சமயம் ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறியது, இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு உயிரழந்தார். மேலும் படுக்கையில் அதிகமாக தீப்பற்றி எரிந்தது.

  • தொடரும் பிறை மோசடி

    – AF-50 கொழும்பு: நாட்டின் சில பாகங்களில் இன்று மாலை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டிருக்கிறது. எனினும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் 15ம் திகதி வெள்ளிக்கிழமை நோன்பைத் தொடருமாறு அறிவித்துள்ளது. ஏற்கனவே ACJU உறுப்பினர்களுக்கிடையே பிறை கருத்து முரண்பாடுகள் ரமழான் ஆரம்பத்திலிருந்து இருந்துவந்த நிலையில், இப்பிறை விவகாரத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பிறை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • உலகில் இன்று பிறை தென்பட்ட நாடுகளின் விபரங்கள்

    – MJ பக்தாத்: இன்று 14 மாலை ஷவ்வால் பிறை பல நாடுகளில் தென்பட்டிருக்கின்றன. பஹ்ரைன் 39 நிமிடங்கள், நோர்கட் 45 நிமிடங்கள், ரபா 49 நிமிடங்கள், மொகாதிசு, கர்தூம், திரிபோலி, அல்ஜீரிஸ் ஆகிய இடங்களில் 46 நிமிடங்களும், டிபோஜிஸ் மற்றும் டியூனிஸ் 44 நிமிடங்கள், கெய்ரோ 43 நிமிடங்கள், சனா 42 நிமிடங்கள், றியாத், அம்மான், ஜெருஸலம் 42 நிமிடங்கள், பெய்ருட், டமஸ்கஸ், டோஹா, அபிதாபி, குவைட் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் 41 நிமிடங்களும்…

  • சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாளை பெருநாள்

    றியாத்: சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாளை வெள்ளிக்கிழமை (15) பெருநாள் என அந்நாடுகளின் உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

  • கஃபாவில் மலக்கு இறங்கும் காணொளியும் புத்தி சுவாதீனமற்ற நம்மவர்களும்

    – MJ லண்டன்: தற்பொழுது இந்த ரமழானின் (2018) 27ம் இரவு கஃபாவில் மலக்கு ஒருவர் இறங்குவது போல் ஒரு காணொளி வட்ஸ்அப் இலும் முகநூலிலும் பரப்பப்பட்டு வருகிறது. “மாஷா அல்லாஹ்”, “அல்லாஹு அக்பர்” என்று புத்திசுவாதீனமற்ற எம்மவர்களால் வியக்கப்படுகிறது.

  • “ஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்”

    – வை எல் எஸ் ஹமீட் பிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு மீண்டும் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் எப்போது பெருநாள் கொண்டாட வேண்டும்; எனத்தீர்மானிப்பதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு எந்த அதிகாரமும் இருக்கமுடியாது. இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிவாயில்களில் அதுவும் ஒன்று, அவ்வளவுதான்.

  • மாட்டிறைச்சிக் கடைக்கு நிரந்தரமாக பூட்டு

    மத்துகம: மத்துகம பொது சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான பிரேரணையொன்றை பிவித்துரு ஹெல உறுமயவின் நாரவில சமித்தவஞ்ச தேரர் பிரதேச சபையில் முன்வைத்தார். மேலும், மத்துகம பொது சந்தையில் இயங்கும் மாட்டிறைச்சி கடைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அனுமதி பத்திரத்தினை வழங்குவது தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் அவர் அந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.

  • துருக்கியில் இன்று 27ம் இரவு

    SMG-90 அங்காரா: சங்கைமிக்க ரமழானின் 27ம் இரவை இன்று ஞாயிறு இரவு துருக்கி மக்கள் அடைகின்றனர். 27ம் இரவுக்கும் மகத்துவமிக்க இரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், இலங்கை, இந்தியா முஸ்லிம்களிடத்தில் 27ம் இரவுக்கு ஓர் தனிச்சிறப்புக் கொடுப்பதுண்டு. இதனடிப்படையில் இன்றிரவு துருக்கி மக்களும், திங்கள் இரவு இலங்கை தவிர்ந்த உலக மக்களும், செவ்வாய் இரவு இலங்கை மக்களும் 27ம் இரவை அடைகின்றனர்.

  • சந்தேக நபர்கள் கைது

    காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று காலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளனர்.

  • “தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுத்தே சித்தியடைகின்றனர் எனும் விஜேதாச ராஜபக்சவின் கூற்றை வண்மையாக கண்டிக்கிறேன்” – பிரதி அமைச்சர் ஹரீஸ்

    அகமட் எஸ். முகைடீன் கல்முனை: விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் வண்மையாக கண்டிப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

  • சங்கைமிக்க ரமழானில் ஈனப்பிறவிகளால் வீழ்த்தப்பட்ட வயோதிபம்

  • காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் மரணம்

    AF-11 காத்தான்குடி: காத்தான்குடி டீன் வீதி, அலியார் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உணவகம் நடாத்திவரும் இஸ்மாயில் (பழனி பாவா) எனும் 70 வயது முதியவர் மரணமாகியியுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

←Previous Page
1 … 91 92 93 94 95 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar