-
“பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னை நன்றாகக் கவனித்தார்கள்”
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தினர் தம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள் என்றும், அவர்கள் நடத்தை மிகவும் தொழில்முறையுடன் இருந்தது என்றும் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறும் காணொளியை பாகிஸ்தான் ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
-
அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்?
உண்மையில் பாகிஸ்தானின் மனிதாபிமானம் உலகளவில் பேசப்படுவதை இந்திய ஊடகங்களால் பொறுமைகாக்க முடியவில்லை லாஹூர்: இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கையாளும் உத்திகளின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிக்கும் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. அபிநந்தனை விடுவிக்கும் முடிவை அறிவித்தபோது இம்ரான்கான் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, தாம் அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிவிக்கவில்லை.
-
தவறான செய்திகளைப் பரப்பும் இந்திய ஊடகங்கள்
…. அதாவது, இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறும் நாளுக்கு ஓரிரவு முன்பு! லண்டன்: பாகிஸ்தான் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்துவது போல ஒரு காணொளி வைரலாக பரவி வருகிறது. பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்களும் அதனை ஒளிப்பரப்பின, சமூக ஊடக பயனர்களும் அதனை பகிர்ந்து வருகின்றனர். அந்த காணொளியில், இருளில் போர் விமானம் பறப்பது போலவும், நெருப்பை உமிழ்வது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த காணொளி செவ்வாய்க்கிழமைக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
-
விமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை
டாக்கா: டாக்காவில் இருந்து துபாய்க்கு பறந்த விமானத்தை கடத்திய மர்ம நபரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட பிமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான BG147 ரக விமானத்தை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கடத்தினார். சிட்டாகாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து 148 பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். ஆனால் 2 விமானிகள் அந்த மர்ம நபரின் பிடியில் சிக்கினர்.
-
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ள பொலிஸார்
கொழும்பு: இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கொழும்பு, கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போதே, இந்த ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
-
ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தல்
றியாத் ஏ. மஜீத் அட்டாளைச்சேனை: தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) மாதாந்தக் கூட்டமும் அங்கத்தவர்களின் பெயர் விபரங்களை கணனிப்படுத்தல் மற்றும் ஒன்லைன் ஊடாக ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தல் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை (23) மாலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.
-
புதிய சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்
டேராடூன்: ஆப்கானிஸ்தான் அணி, டி-20 கிரிக்கெட் போட்டியில் 278 ரன்கள் எடுத்து, சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் டேராடூன் நகரில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடரில், அயர்லாந்து அணிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. இதற்கு முன்பு, 2016-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி எடுத்த, 263 ரன்கள் (3 விக்கெட் இழப்புக்கு) என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் முறியடித்துள்ளது.
-
‘’இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம்’’- இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான PTVயில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
-
2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்
கொழும்பு: 2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகள் மூலமாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை பரீட்சைத் திணைக்களத்தின http://www.doenets.lk எனும் இணையளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.
-
‘பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்’ – இந்தியா
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக இந்தியா கூறியுள்ளது. இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என மூத்த அமைச்சர் ஒருவர் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
-
“இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன்பாக, நான் சொர்க்கத்தில் இருப்பேன்”
SHM ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் (14) மத்திய ரிசர்வ் படையினர் மீது தாக்குதல் நடத்தி 40 பேருக்கும் மேல் பலியாக காரணமாக இருந்த போராளி குறித்த பின்புலம் வெளியாகியுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த பஸ் மீது ஸ்கார்பியோ வகை காரை மோதச் செய்து பெரும் சேதத்தை விளைவித்தவர் அடில் அகமது தார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின், குன்டிபாக் கமாண்டோ வகாஸ் என அழைக்கப்படுபவர்.
-
அடித்தளமே இல்லாமல் 387 வருடங்கள் அசையாமல் ஜொலிக்கும் தாஜ்மஹால்!
SHM- உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 1632 ஆம் ஆண்டு தனது கட்டுமான பணியை துவங்கியது. முகலாய பேரரசர், ஷாஜகான் தலைமையில் 1653 ஆம் ஆண்டு தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டது. தாஜ்மஹாலை கட்டி முடிக்க மொத்தம் 21 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. தாஜ்மஹால் இல் 28 விதமான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாஜ்மஹால் கட்டப்பட்டு சுமார் 387 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இவ்வளவு உறுதியாகப் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் தாஜ்மஹாலிற்கு அடித்தளம் கிடையாது என்பது முதல் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.