kashmirடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக இந்தியா கூறியுள்ளது. இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என மூத்த அமைச்சர் ஒருவர் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

 

வியாழக்கிழமையன்று ராணுவ வாகனமொன்றில் இந்த துருப்புகள் சென்றபோது வெடிபொருள் நிரப்பிய கார் மூலம் வெடிக்க செய்து, இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு தெரிவித்தது. கடந்த மூன்று தசாப்தங்களில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும்.

kashmir

இந்த தாக்குதல் தொடர்பாக தாங்கள் மிகுந்த கவலை அடைந்துப்பதாகவும், இதில் தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.