-
சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கி போயிருக்கும் பெண்களை வளைப்பது எளிது
– SHM பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த 20 மிருகங்கள் 200-க்கும் மேற்பட்ட பெண்களை எப்படி வேட்டையாடின என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களிடம் நட்பாக பழகும் பெண்களை தனியாக அழைத்து சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கூறினார். இதையடுத்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வீடியோவில் பெண்களின் மரண ஓலங்கள் போல் குரல்கள்…
-
150 கிலோ ஹெரோயின் மீட்பு
சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர் தெரிவித்தார். இன்று (11) மொரட்டுவை, ராவத்தாவத்தையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பேதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
ஷமிமாவின் மூன்றாவது குழந்தையும் மரணித்தது
லண்டன்: ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம்.அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை…
-
ஒரு விமானியை கைது செய்தோம் என்று ஏன் பாகிஸ்தான் பொய் கூறியது ? இஸ்ரேலிய விமானிக்கு அங்கு என்ன வேலை ?
அண்மையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நள்ளிரவு வேளையில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஊடுருவி குண்டு தாக்குதல் நடாத்திவிட்டு வரும்போது பாகிஸ்தான் விமானப்படை விமானத்தினால் வழிமறிக்கப்பட்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவத்துக்கு பின்பு நாங்கள் இந்தியாவின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் உடனடியாக அறிவித்திருந்தது.
-
சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளை பெறாமலே என்னால் ஜனாதிபதி தேர்தலில் வெல்லமுடியும்- கோத்தபாய
ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெறமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு இன்றியும் என்னால் வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார் இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
-
பிரதமரை அவசரமாக சந்திக்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
– அகமட் எஸ். முகைடீன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான அவர்களுடைய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருமாறு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளனர். பிரதமருடனான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இச்சந்திப்பின்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிரஅபேவர்த்தனவும் பிரசன்னமாகியிருந்துள்ளார்.
-
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமும், அதிலிருந்து படிப்பினை பெறாத முஸ்லிம்களும்
– முகம்மத் இக்பால் சாய்ந்தமருது. முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் நடைபெற்ற இனக் கலவரமானது கடந்த வருடம் அம்பாறை ஹோட்டல் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டு பின்பு அது கண்டி மாவட்டம் முழுவதும் அரங்கேற்றப்பட்டதுடன் நாடு முழுக்க அதன் தாக்கம் உணரப்பட்டது. . கடந்த வருடம் மார்ச் மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் எட்டாம் திகதி வரைக்கும் இந்த நாட்டில் எந்தவொரு சிவில் நிருவாகமோ, அரச இயந்திரமோ இயங்கவில்லை.
-
வரவு – செலவு திட்ட வாசிப்பு முழுவிபரம்
04.19 வரவு – செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 04.13 மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ஒதுக்கம். 04.12 கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக ஒருநாள் சேவைக்கட்டணம் 5,000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை. சாதாரண சேவைக் கட்டணம் 3,000 ரூபாவாகும்.
-
இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் ஊடுருவலை முறியடித்த பாகிஸ்தான்!
அமைதியின் மீதான பாகிஸ்தானின் நாட்டம் காரணமாக அந்த இந்திய நீர்மூழ்கியைத் தாங்கள் தாக்கவில்லை இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைவதற்கு திங்கள்கிழமை இரவு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தான் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
-
“ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால் கதையே வேறு”-மோடி
டெல்லி: ரபேல் விமானம் மட்டும் நமது கையில் இருந்திருந்தால் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று இந்திய பிரதமர் மோடி பேசி இருக்கிறார். “சர்வதேச கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019 ” என்று மாநாட்டில் டெல்லியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் அவர் அரசியல் சார்ந்த விஷயங்கள் நிறைய பேசினார். அதேபோல் காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்தும், விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.…
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி-1, ஊர் வீதியைச் சேர்ந்த S.M.P.முகைதீன் அவர்கள் சற்று முன் காலமானார்.”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. அன்னார், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளரும், காத்தான்குடி சித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவரும், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்ஆ பள்ளி வாயலின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளரும் ஆவார்.
-
இலங்கை கிரிக்கெட்டிற்கு 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியது ஐ.சி.சி
டுபாய்: சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகம் அமைந்துள்ள டுபாயில் (3) இடம்பெற்ற சிறப்பு சந்திப்பின்போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.