சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கி போயிருக்கும் பெண்களை வளைப்பது எளிது

facebook women– SHM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த 20 மிருகங்கள் 200-க்கும் மேற்பட்ட பெண்களை எப்படி வேட்டையாடின என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களிடம் நட்பாக பழகும் பெண்களை தனியாக அழைத்து சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கூறினார். இதையடுத்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வீடியோவில் பெண்களின் மரண ஓலங்கள் போல் குரல்கள் கேட்பதால் அதை கேட்போர் மனம் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிலையில் இவர்களிடம் பெண்கள் கெட்டு சீரழிந்தது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் பணம் சம்பாதிப்பதிலேயே முழு நேரமும் குறியாக இருந்தனர். இதில் பார்களை குத்தகைக்கு எடுக்கும் தொழில், வட்டிக்கு பணம் கொடுப்பது என பணம் புழங்கும் தொழில்களையே செய்து வந்தனர். கூடவே பெண்ணாசையும் சேர்ந்து இவர்களுக்கு ஒட்டிக் கொண்டது. அதன் விளைவு பெரிய ராஜா வீட்டு கன்றுக்குட்டிகளை போல் விலையுயர்ந்த கார்கள், உயர்ந்த ஆடைகள் என வளைய வந்துள்ளனர்.

சினிமா நடிகர்கள் போல் போட்டோக்களை எடுத்து பெண்களிடம் உருக்கமாக பேசி தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கி போயிருக்கும் பெண்களை வளைப்பது எளிது என்பதால் இவர்கள் அந்த யுத்தியை கையாண்டுள்ளனர்.

facebook women
yourkattankudy/women on social media

பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி ஐடி தயார் செய்து முதலில் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தி கொள்வார்கள். பின்னர் அந்த பெண்களின் தனிப்பட்ட விவரங்களை பெற்றுக் கொண்டு, லெஸ்பியன் குறித்து கேள்விகளை எழுப்புவார்கள். தற்போது இளம் பெண்கள் லெஸ்பியன் உறவுகளால் பின்னப்பட்டுள்ளதால் அவர்களும் பதில் கூறுவர். இதையடுத்து அந்த பெண்களை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைப்பர்.

அங்கு போய் பார்த்து அந்த நபர் ஆண் என தெரிந்ததும் அந்த பெண் எதிர்ப்பு தெரிவிப்பார். பின்னர் லெஸ்பியன் குறித்து அந்த பெண் கூறிய தகவல்களை வெளியிடுவோம் என மிரட்டி விடுவர். இது போல் சிக்கிய பெண்கள் ஏராளம். அவ்வாறு சிக்கும் பெண்களை தனிமையில் அழைத்து சென்று பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுப்பர். பணக்கார பெண்களாக இருந்தால் அவர்களிடம் பணம் பறிப்பதும் ஏழைகளாக இருந்தால் அவர்களை மீண்டும் மீண்டும் தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையுமே வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

மேலும் பகிரப்படும் அரை, முழு நிர்வாணப் படங்களும், காணொளிகளும், பாலியல் சட்டுக்களும் கழுத்திறுக்கும் கயிறுகளால் அவர்கள் மீது திணிக்கப்படும். இப்படியே பல பெண்கள் இந்தியாவில் மாத்திரமல்ல இலங்கையிலும் மாட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது.SHM

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s