Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பாராட்டு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை கார்மல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவியும், ஊடகவியலாளர் யு. முகம்மட் இஸ்ஹாக்கின் மூத்த புதல்வியுமான எம்.ஐ. பர்ஹத் பர்ஹானா சமீபத்தில் வெளியான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.

  • மாணவர்களுக்கான வழிகாட்டற் கருத்தரங்கு

    அஸ்மி தாஜூதீன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காத்தான்குடி) காத்தான்குடி: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 14-04-2014 காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 வரை காத்தான்குடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

  • சவால்களுக்கு மத்தியிலான பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

    ரைஸ் கிண்ணியா: பெரியதொரு இடைவெளி தாண்டி வெகுவிமர்சையாக இடம்பெற்ற கிண்ணியா பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. பேரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை அதிபர் முகம்மது தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி பாடசாலையின் புதிய நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  • ‘இஸ்லாத்தை முறிப்பவை’ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 17-04-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • மட்டக்களப்பு படுவான்கரை மக்களுக்கு நீண்டகாலம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த மண்முணைப்பாலம் பூர்த்தி – ஜனாதிபதி 19ஆம் திகதி மாலை திறந்து வைப்பார்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: நீண்ட காலமாக சுமார் 2 இலட்சம் படுவான்கரை பிரதேச மக்களின் போக்குவரத்திற்கு மிக இடைஞ்சலாக இருந்து வந்த மண்முனைத்துறை புதிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் முற்றாக நிறைவு பெற்றுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மாலை 4 மணியளவில் இப்பாலத்தை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கவுள்ளார்.

  • ஜீப் வண்டி விபத்து : குழந்தை பலி

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  ஆனமடுவ: ஆனமடுவ – பள்ளம வீதி வென்தகடுவே பிரதேசத்தில் ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று பலியானதுடன் மேலும் 9 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (15) மாலை 7.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

  • அனுப்பப்படட நீர்மூழ்கிக் கப்பலுக்கும் எந்த தடயங்ளும் கிடைக்கவில்லை!

    – S-90   பேர்த்:  இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேட கடலின் தரை பரப்புக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் நீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் பாதியிலேயே தேடலை முடித்துக் கொண்டு திரும்பிவிட்டது.   கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசியா அறிவித்தது. இதையடுத்து விமானத்தை கடலில் தேடும் பணி 38 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. முதலில் கடலில்…

  • கிரிக்கட் ஆடும் கேம்ப்ரிட்ஜ் ராணி கேட்

    – SHM ஓக்லாந்த்: நியூசிலாந்துக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய அரச பரம்பரைக்குரிய இளவரசர் வில்லியம்ஸ், கேட் வில்லயம்ஸ் ஆகியோருக்கு நியூசிலாந்து மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓர் நிகழ்வில் கலந்துகொள்வதற்குச் சென்ற கேம்ப்ரிட்ஜ் ராணி கேட் வில்லியம்ஸ் தனது பெருமதிமிக்க ஆடையுடனும், உயர் காலணியுடனும் கிரிக்கட் விளையாடியது உலகை ஈர்த்துள்ளது.

  • மலேசிய விமானத்தை தேடி ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்

     SHMகோலாலம்பூர்:  மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கடல் தரை பரப்பில் தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் ஆயுள் முடிந்துவிட்டது. இதையடுத்து அதில் இருந்து வந்த சிக்னல்களும் அடங்கிவிட்டன. இதனால் நீருக்கு அடியில் சென்று கருப்புப் பெட்டியை தேட முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • பொது பல சேனா அராஜகங்கள் தொடர்பில் அமைச்சர்களான டிலான் பெரோரா, வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையில் பொது பல சேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது.முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும், தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம்.

  • உலக சாதனைபெற்ற உலக இருபது20 இறுதிப்போட்டி-2014

    லண்டன்: T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர். இணையதளத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றை இவ்வளவு ரசிகர்கள் பார்த்திருப்பது இதுவே முதன்முறையாகும். இப்போட்டியில் இலங்கை அணி முதன்முறையாக T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. சமீபத்தில் முடிவடைந்த T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அனைத்தும் ’ஸ்டார்ஸ் போர்ட்ஸ்’ இணையதளத்தில் ஒளிபரப்பானது.

  • சவூதி அரேபிய அல் – ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தமிழ் பிரிவின் ஏற்பாட்டில் 16வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

    சவூதி அரேபிய அல் – ஜூபையிலிருந்து பழுலுல்லாஹ் முஹம்மட் பர்தான் அல் – ஜூபைல்: சவூதி அரேபிய அல் -ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தமிழ் பிரிவின் ஏற்பாட்டில் 16வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு அல் – ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தில் எதிர்வரும் 18-04-2014 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மஹரிப் தொழுகை வரை இடம்பெறவுள்ளது.

←Previous Page
1 … 783 784 785 786 787 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar