Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கையில் ஜிஹாத், தலிபான்கள் விடயமாக முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுப் பிரிவினர் 5 மணிநேர விசாரணை!

    கொழும்பு: இலங்கையில் ஜிஹாத் மற்றும் தலிபான் அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று கொழும்பில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

  • ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் 6 வது மாவட்ட கிளை காரியாலயம் -மட்டக்களப்பில் திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கல்வி மற்றும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வரும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை காரியாலயம் இலக்கம் 55.1 புதிய வன்னியா வீதி ,மட்டக்களப்பு எனும் முகவரியில் 26 இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  • கோத்தபாயவுக்காக புதிய அரசியல் வியூகம்: அஸ்வர் சம்மதம்! பௌசி எதிர்ப்பு!!

    – SHM கொழும்பு: அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையான பொதுபலசேனாவின் செயற்பாடுகள், புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள், மற்றும் வெளிநாடுகளில் இடம்பெற்ற இலங்கை முஸ்லிம்களின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் போன்வற்றால் அரசாங்கம் அதள பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணிப்பில் அரசாங்கம் இலங்கை மக்களை சமாளித்து, தாளிக்க முன்வந்தாலும், சர்வதேசத்தின் பார்வையில் மூக்குடைபட்டிருக்கின்றனது.

  • ஆடிப்போன அரசாங்கத்தின் மற்றுமொரு முயற்சி: சரன்பொன்சேகாவுக்கும் வலை வீச்சு!

    – SHM கொழும்பு: தற்பொழுது இலங்கையிலும், உலக நாடுகளிலும் ஏற்பட்டுள்ள விமர்சனங்களால் ஆளும் அரசாங்கம் தளர்ந்து போய், ஆட்டம் கண்டுள்ளமை நிரூபனமாகியுள்ளது. இந்த வகையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆளுங்கட்சிக்குள் உள்வாங்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம்  பாலமுனையில் திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய பாலமுனை பிரதான வீதியில் 25-06-2014 இன்று புதன்கிழமை பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

  • இத்தாலி வீரரைக் கடித்த சுவாரஸுக்கு 24 போட்டிகளில் ஆட தடைவிதிக்கப்படலாம்!! (காணொளி)

    – S-90 ரியோடி ஜெனீரோ: இத்தாலியுடன் நடந்த போட்டியின்போது இத்தாலி அணியின் ஜியார்ஜியோ சிலெனினியின் தோள் பட்டையில் பல் பதியும் அளவுக்கு கடித்த உருகுவ வீர்ர் லூயிஸ் சுவாரஸுக்கு 24 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.இந்த கடி விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்துக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

  • முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இணைவதற்கு 60 அமைச்சர்கள் தயார்!

    கொழும்பு: ஆளும் அரசாங்கத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அதில் அங்கம் வகிக்கும் 60 அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைய தருணம் பார்த்து காத்திருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

  • குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) ஏற்பாடு செய்யும் ‘9ம் ஆண்டு புனித ரமழான் வரவேற்பு’ சிறப்பு நிகழ்ச்சி!

    – K-TIC பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC),  குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாத வருகையொட்டி அம்மாதத்தின் சிறப்புகள், நோன்பின் மாண்புகள், ஆற்ற வேண்டிய கடமைகள், தவிர்க்க வேண்டிய செயற்பாடுகள் மற்றும் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

  • ‘கிழக்கு மாகாண சபையின் 12 கட்சித் தலைவர்களின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமிலுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார்’-  அமைச்சர் உதுமாலெப்பை பதில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாண சபையின் 12 கட்சித் தலைவர்களின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமிலுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

  • காத்தான்குடி பிரதான வீதியில் இவ்வருடம் அறுவடைக்கு தயாரான பேரீத்தம் பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கமைவாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  • மலேசிய விமானம் மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளது

    – SHM கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர்.கடந்த மார்ச் 8-ம்  திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது.

  • ‘எம்மீது நிகழ்த்தப்பட்டது சாதாணர இனவாதத் தாக்குதல் மட்டுமன்றி ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும்’ என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

    PMGG ஊடகப்பிரிவு அளுத்கம: ‘கடந்த 15ம், 16ம் திகதிகளில் பொது பல சேனா மற்றும் ராவண பலயா போன்ற பேரினவாத பௌத்த திவிரவாத அமைப்புக்களினால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அளுத்கம மற்றும் தர்ஹா நகர் பிரதேச முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஒரு இனவாதத் தாக்குதல் மாத்திரமல்ல அவை முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும். அதற்கான மறுக்க முடியாத சான்றுகள் இங்கே களத்தில் இருக்கின்றன’ என குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்…

←Previous Page
1 … 726 727 728 729 730 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar