குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) ஏற்பாடு செய்யும் ‘9ம் ஆண்டு புனித ரமழான் வரவேற்பு’ சிறப்பு நிகழ்ச்சி!

ramadan-kareem-wallpapers– K-TIC

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC),  குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாத வருகையொட்டி அம்மாதத்தின் சிறப்புகள், நோன்பின் மாண்புகள், ஆற்ற வேண்டிய கடமைகள், தவிர்க்க வேண்டிய செயற்பாடுகள் மற்றும் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

நாள்: 27.06.2014 வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ்…

நேரம்: நண்பகல் 11:40 மணி முதல்….

இடம்: K-TIC தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) மஸ்ஜித், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஃகைத்தான்.

தலைமை: மவ்லவீ  MS. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர், K-TIC.

ஜும்ஆப் பேருரை: மவ்லவீ அஃப்ழலுல் உலமா MG. கலீல் அஹ்மத் பாகவீ MA. – பொதுச் செயலாளர், K-TIC.

சிறப்புரை: மவ்லவீ ஹாஃபிழ் காரீ A. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ – துணைத் தலைவர், K-TIC.

கருப்பொருள்: ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!

‘ரமழானை திட்டமிட்டுக் கொள்ள சில வழிகாட்டல்கள்’ மற்றும் ‘ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!’ பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும்.

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் இணைப்பில்…

அனைவரும் குடும்பத்துடன் வருக…! அன்பர்களையும் அழைத்து வருக…!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக….!!!

நன்றி! வஸ்ஸலாம்.

Ramadhan 2014 1

Published by

Leave a comment