முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இணைவதற்கு 60 அமைச்சர்கள் தயார்!

Chandrika9.img_assist_custom[1]கொழும்பு: ஆளும் அரசாங்கத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அதில் அங்கம் வகிக்கும் 60 அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைய தருணம் பார்த்து காத்திருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மகாவலி எச் வலையத்தின் விவசாய அமைப்புகளில் தலைவர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் ஆணிகள் துருப்பிடித்து தளர்ந்து போயுள்ளன. இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்திற்கு செல்ல இடமிருக்காது. இதனால் அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்தும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும்.

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு இரசாயன பசளைகளை வழங்க முடியாதுள்ளது. பசளை நிறுவனங்களுக்கு அரசாங்கம் பல பில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் பசளைகளை கொள்வனவு செய்ய முடியாது எனவும் பீ. ஹரிசன் கூறியுள்ளார்.

அண்மைய முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போதும், சில முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கம் பற்றி சில அதிருப்திகளை வெளிக்கொணர்ந்திருந்தனர்.

இத்தகைய இவர்களின் தைரியம், ஒருவேளை சந்திரிக்காவுடன் எதிர்காலத்தில் இணைந்து கொள்ள முடியும் என்ற நோக்கத்திலும் இருக்கலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment