Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது

    கொழும்பு: கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு – ஷங்கிரி–லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், மொஹமட் சஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

  • உலகக்கிண்ண கிரிக்கட் 2019: உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு

  • சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு : பல தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

    சாய்ந்தமருது: பிராந்தியத்தின் இயல்வு நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் முகமாகவும் இன நல்லிணக்கம், சமாதானம் என்பவற்றை வலியுறுத்தியும் சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (18) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • அன்று “வஹாபிகளின் ஸலவாத்” இன்று ஹூப்பாகிப்போனது….?

    உசேன்YKK காத்தான்குடி: புராதன காத்தான்குடியில் ரமழான் காலங்களில் தறாவீஹ் தொழுகைக்கு முன்னர் பள்ளிவாயல்களில் ஸலவாத் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. அரேபியர்களின் வருகை நின்று, தழிழ்நாடு மற்றும் கேரளா வியாபாரிகளினதும், ஆலிம்களினதும் வருகைக்குப்பின்னர், ஆடை கலாசாரங்களிலும் மார்க்க விடயங்களிலும் தழிழ்நாட்டு முஸ்லிம்களைப் பின்பற்றி காத்தான்குடி முஸ்லிம்கள் மாற ஆரம்பித்தனர்.

  • பாய்ந்துகொடுப்பதிலும் ஓர் அளவு வேண்டும்

    இர்ஷாட் ஏ. காதர் கொழும்பு: பௌத்தர்களின் பெரும் கொண்டாட்டமாகத் திகழும் வெஷக் தினத்தினை முன்னிட்டு இலங்கையில் வழமை போன்று வர்ண தோரணங்களும், மத வழிபாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. இத்தகைய வெஷக் வழிபாடுகளுக்கும் அதன் தோரணங்களுக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிலர் பங்குபற்றி சர்வமதமும் சம்மதமே என்ற ரீதியில் ஒன்றிணைந்து சிறப்பித்து வருகின்றனர்.

  • சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை

    – பாறுக் ஷிஹான் இன்று (18) அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் குறித்த கணனியை சோதனை மேற்கொண்ட நிலையில் அதிலிருந்து அண்மையில் இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரானின் புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

  • காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விஷேட பிராத்தனை

    நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படவும் ஐக்கியமும் சமாதானமும் நல்லிணக்கம் ஏற்படவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலவை வேண்டியும் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாயலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட விஷேட பிராத்தனை நேற்றைய தினம் (17.05.2019) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.

  • நம்பிக்கையில்லாப் பிரேரணையும் பா உறுப்பினர்/ அமைச்சர் பதவிகளும்

    – வை எல் எஸ் ஹமீட் ஒரு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அது வெற்றிபெற்றால் அது அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அல்லது அமைச்சர் பதவியை சட்டரீதியாக பாதிக்குமா? பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகுதல் ——————————————————— (1) அவரது கட்சி அவரை தனது அங்கத்துவத்தில் இருந்து விலக்குதல். ( ஒரு மாதத்திற்குள் நீதிமன்றம் சென்றால் அத்தீர்ப்பின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்)

  • குண்டுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்பே முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவது ஏன் ?

    முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது   எந்தவொரு சமூகமோ அல்லது தனிநபரோ பலயீனமாக இருந்தால் அவர்கள் மீது பலமுள்ளவன் அரசியல் காரணங்களுக்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது உலக நடைமுறையாகும்.    இவ்வாறு தங்களை பலமுள்ளவர்கள் நசுக்க முற்படுவார்கள் என்று உணர்ந்து பலயீனமாக உள்ளவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ளாதவரை வேறு வழியின்றி தொடர்ந்து அடிவாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். 

  • முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு விடயங்களில் அதிகரித்த அழுத்தம் ஆரோக்கியமானதல்ல!

     மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நிகாப் விடயத்தில் புரிந்துணர்வு ஏற்பட்ட பின்னரும் முஸ்லிம் மாதரின் ஆடை சீருடை விடயத்தில் மேலதிக அழுத்தங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது பலிக்கடவாக்கப்படுவது முஸ்லிம்களாக இருப்பினும் இலக்கு வைக்கப் படுவது இந்து சமுத்திரத்தின் முத்தான இந்த அழகிய தேசமாகும்! ஐ எஸ் ஐ எஸ் ற்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று அறிந்த பின்னரும் முஸ்லிம்கள் மீது இஸ்லாமோ போபிய அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது! முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்டுக்…

  • அமித் வீரசிங்க, நாமல் குமார கைது

    ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 13 பேர் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைக் குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (12) மற்றும் நேற்று (13) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்க இன்று (14) கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

  • பௌத்த தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்படும் முஸ்லிம்களின் உடமைகள்: ஒருவர் உயிரிழப்பு

    AK-79 கொழும்பு: ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரம். பாதுகாப்புப்படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நேரம்… ஆம் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் பௌத்த தீவிரவாதிகள் கடைப்பிடிக்கும் கோழைத்தனத்தின் பொறுக்கித்தனம். முஸ்லிம்களின் உடமைகளைக் கொள்ளையடித்தல், பணம் உட்பட பெறுமதியான பொருட்களை சூரையாடுதல், பள்ளிவாயல் கண்ணாடிகளை உடைத்தல், அல்குர்ஆனை எரித்தல், வாகனங்களுக்குத் தீ வைத்தல்… இவ்வாறு பௌத்த தீவிரவாதம் இலங்கையில் விரிவடைந்திருக்கிறது.

←Previous Page
1 … 70 71 72 73 74 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar