- AK-79
கொழும்பு: ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரம். பாதுகாப்புப்படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நேரம்… ஆம் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் பௌத்த தீவிரவாதிகள் கடைப்பிடிக்கும் கோழைத்தனத்தின் பொறுக்கித்தனம்.
முஸ்லிம்களின் உடமைகளைக் கொள்ளையடித்தல், பணம் உட்பட பெறுமதியான பொருட்களை சூரையாடுதல், பள்ளிவாயல் கண்ணாடிகளை உடைத்தல், அல்குர்ஆனை எரித்தல், வாகனங்களுக்குத் தீ வைத்தல்… இவ்வாறு பௌத்த தீவிரவாதம் இலங்கையில் விரிவடைந்திருக்கிறது.
ஹூப்பிஸமும், வஹாபிஸமும் தங்களைத் தாங்களை அழித்துக்கொண்டு அவர்களால் முன்னெடுக்கப்படும் பத்திரிகை மாநாடும், வீடியோ பகிர்வுகளும் பேரினவாதிகளை குறிப்பாக பௌத்த தீவிரவாதிகளை குளிரவைக்காது.
நாம் என்றும் சொல்வது போல் தீவிரவாதிகளுக்கு ஹூப்பிஸமும் தெரியாது, வஹாபிஸமும் தெரியாது.
உடைக்கும் கடைகளும் கல்லடிக்கும் பள்ளிவாயல்களும், தீ மூட்டப்படும் உடைமைகளும் வஹாபியா… ஹூப்பா என்று அவனுக்குத் தெரியாது.
இலங்கையில் அபாயா அணிந்த, தொப்பி போடும், தாடி வைத்த பொதுவாக எல்லா முஸ்லிமும் தீவிரவாதிக்கு எதிரிதான்.
நாளை ஓர் தேர்தல் வந்தால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான அரசாங்கம் நாங்கள்தான் என்று இந்த தீவிரவாதக் கும்பல்களை இயக்குபவர்கள், பின்னிற்பவர்கள், கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் அனைவரும் எங்கள் காலடிக்கு வருவார்கள்.
ஆழ்ந்த சோகத்தில் இலங்கை முஸ்லிம்கள் மூழ்கியிருக்கும் ஓர் உன்னத நேரத்தில் நேற்றைய ஐ.பி.எல். களியாட்டத்துக்கு எமது முஸ்லிம் உம்மத்துக்கள் கொடுத்த முக்கியத்துவத்தைவிடவும், இன்னும் இன்னும் அதிகமாக இந்த பௌத்த தீவிரவாதிகளின் பின் நிற்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துவர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளை இந்நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவதற்கு அறிக்கை விட்ட அமைப்புக்கள், பத்திரிகை மாநாடு நடாத்திய அமைப்புக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துசிறப்பித்த எம் அரசியல்வாதிகள் அனைவரும் பௌத்த தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல்கொடுக்க முன்வர வேண்டும்.
இல்லை என்றால் இலங்கை முழுவதும் பௌத்த தீவிரவாதம் தலைவிரித்தாடும்.
“எங்கள் ஊருக்கு வர ஏலா வந்தா விட மாட்டோம். ஏலும் என்றா வந்து பார்க்கட்டும்” என்றொல்லாம் தேங்காய்ப்பூச் சண்டித்தனம் காட்டிய அன்றைய நாட்கள் அல்ல இன்று. ஊரடங்கைப் பிறப்பித்துவிட்டால் ஊர் அடங்கும். பௌத்த தீவிரவாதிகள் வருவார்கள். உடைப்பபார்கள். எரிப்பார்கள்.
வெளியே வருபவன்… அவன் ஐ.எஸ். தீவிரவாதி என்ற குற்றச்சாட்டில் வீழ்த்தப்படுவான்!
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவர் சற்று முன்னர் காலமானார். நாட்டின் ஆங்காங்கே தொடரும் பௌத்த தீவிரவாதிகளின் கலவரத்தால் இன்னுமொரு நபர் காலமானதாக மற்றுமொரு தகவல் கிடைத்திருக்கிறது.
அல்லாஹ் எம் சமூகத்தைப் பாதுகாப்பானாக! AK-79