Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை

    பாறுக் ஷிஹான் காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை தற்போது ஆரம்பமாகி உள்ளது. ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது. இதன் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்றது.

  • ஐ.சி.சி. உலகக்கிண்ணம்-2019 : ஒரே பார்வையில்

    முகமட் ஜலீஸ், இங்கிலாந்து லண்டன்: 12வது உலகக்கிண்ணப்போட்டிகளை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடாத்துகிறது. கோலாகளமாக இடம்பெறும் இவ் உலகக்கிண்ணத்திற்கான முதலாவது போட்டி மே 30 வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. கடந்த 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு இங்கிலாந்திற்குக் கிடைத்திருந்தபோதும், இங்கிலாந்து, வேல்ஸ் இணைந்து அதனை 2019 இற்கு பிற்போட்டிருந்தன.

  • அமைச்சர் றிஷாத் மீது காழ்ப்புணர்வுகளை கட்டவிழ்த்து விடும் ஊடக தர்மங்கள்…!!!

    இலங்கையில் கடந்த மாதம் 21ம்திகதி உயிர்நீத்த ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பிற்பாடு அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக  தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட தீவிரவாதிகளுடன்  அமைச்சர் றிஷாத்துக்கு மறைமுகமான தொடர்பு இருப்பதாகவும் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டு  சில பாராளுமன்ற உறுப்பினர்களால் திணிக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் அது ஊடுறுவியுள்ளது.

  • அமைச்சர் றிசாத் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ?

    முகம்மத் இக்பால், சாய்ந்தமருது   சதொச நிறுவனத்துக்கு 2014 இல் அரிசி கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி சம்பந்தமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் FCID யினர்களினால் நேற்று (25.05.2019) ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.  2௦15 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவானதில் இருந்து ஏராளமான விசாரணைகள் நடைபெற்றது. அந்த நேரத்தில் அமைச்சர் றிசாத் விசாரிக்கப்பட்டிருந்தால் உண்மையில் அவர் மோசடி செய்த குற்றத்துக்காகவே விசாரிக்கப்படுகிறார் என்று கருதியிருக்கலாம்.

  • பெருநாள் திடல் தொழுகை: காத்தான்குடி நகரசபையின் அறிவித்தல்

  • மட்டக்களப்பு பல்கலை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கான பதில்

    ஷரியா பல்கலைக்கழகம் அமைவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் அனுமதி வழங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். உண்மையில் இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம் அரச பல்கலைக்கழகங்களைத் தவிர வேறு உள்நாட்டு கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகம் என்ற பெயரால் அழைக்க முடியாது. உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட கல்விநிறுவனம் என்றுதான் அதனைக் கூறமுடியும் என ஊடக அறிக்கை விட்டுள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், அமைச்சர் மனோகணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான…

  • “அடிப்­படை கொள்­கையில் செயற்­படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்­டுக்குள் உள்­ளனர்”

    தமது மதம் சாராத  ஏனை­ய­வர்­களை அழிக்­க­  வேண்டும் என்ற அடிப்­படை கொள்­கையில் செயற்­படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்­டுக்குள் உள்­ளனர். இன்று இவர்­களின் மூல­மாக அச்­சு­றுத்தல் இல்­லா­து­  போ­னாலும் எதிர்­கா­லத்தில் அச்­சு­றுத்தல் உள்­ளது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சபையில் தெரி­வித்தார். 

  • காட்டிக்கொடுப்பின் உச்சம்: சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது !

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  • “ஹிஹ்புல்லாஹ் தொடர்பான அனைத்து விபரங்களும் எம்மிடம் உள்ளது”

    கொழும்பு: அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ள எதிரணியினர் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் குற்றங்களை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன அலரிமளிகையில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

  • “அடிப்படைவாதிகள் அரசியல்வாதிகளின் உதவியுடன் உருவாகினார்கள்”- சுமணரத்ன தேரர்

    இலங்கை உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு தேவலாயத்தில் உயிர் நீத்தவர்களின் 31 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21)  மட்டுகாந்தி பூங்காவில் இடம்பெற்றது அதன் போது மங்களராமா விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரர் ஈகைச்சுடர் ஏற்றி  உரையாற்றினார். ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களிலும் மட்டக்களப்பிலும்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாக்குதலில் உயிரிழந்து ஒருமாதம் பூர்தியான நிலையில், நாம் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவூட்டுகின்றோம்.

  • அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

    இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்திற்கு அமைய ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

  • இந்துத் தமிழ் மக்களே இந் நாட்டின் பூர்வீகக் குடி மக்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

    பௌத்த மதம் இலங்கைக்குக் கொண்டு வந்த போது அம் மதத்தை முதன் முதலில் தழுவியவர்கள் தமிழரே. தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்  என வடமாகாண சபையின் முன்னால் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

←Previous Page
1 … 69 70 71 72 73 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar