WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சஹ்ரானின் பழைய ஆவணங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசாங்கமும் ஊடகங்களும்

    AK-79 காத்தான்குடி: சஹ்ரான் காசிமின் 2017 இற்கு பின்னர் உள்ள பயங்கரவாத ஈர்ப்பு விவகாரங்களைவிட்டுவிட்டு 2017 இற்கு முன்னர் உள்ள விவகாரங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து நாளொரு காணொளியையும் அறிக்கைகளையும் வெளியிடும் அரசாங்கமும், தனியார் சிங்கள ஊடகங்களின் செயற்பாடுகளையும் பார்க்கும்போது ஓர் நாடகம் அரங்கேறி இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

  • “சஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் தொடர்பு” – அசாத் சாலி

    கொழும்பு: 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த போதே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இதனைக் குறிப்பிட்டார்.

  • கண்காணிப்பு அமைச்சர் பதவி யாருக்கு தேவை ?

    – முகம்மத் இக்பால், சாய்ந்தமருது தன்மானம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் தங்கள் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.  அத்துடன் வாகனம் உற்பட அமைச்சு மூலமாக கிடைக்கபெற்ற அத்தனை சலுகைகளையும் திரும்ப ஒப்படைத்தார்கள்.  ஆனால் அமைச்சர்களின் இணைப்பு செயலாளர்கள் மட்டத்தில் பதவி வகித்துவந்த சிலர் பதவி நிமித்தம் பாவித்து வந்த அரச வாகனங்களை ஒப்படைக்காமல், பிரதமர் மட்டத்தில் பின்கதவால் வியாபாரம் செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

  • “ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய”

    ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய  ராஜபக்ஷ என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டிசொய்சா குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கு  நடப்பு அரசாங்கம் எவ்வித முக்கியத்துவமும்  கொடுக்கவில்லை என்பது  ஆரம்பத்தில் இருந்து அரசியல்வாதிகளினால் மாத்திரமே பேசப்பட்டது.

  • இலங்கை தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் பதவி விலகல்

    கொழும்பு: தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிசிர மெண்டீஸ் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்ததாக பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். உடல்நல குறைவு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி சிசிர மெண்டீஸ் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழி சொற்களை அகற்றுவது குறித்து தீர்மானம்!

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது பொது அமர்வின் போது நிற‍ைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது பொது அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

  • பிரச்சினைகளுக்கு தீர்வின்றி அமைச்சு பதவிகளை பாரமெடுக்கலாமா ? இதனால் நண்மை அடைபவர்கள் யார் ?

    – முகம்மத் இக்பால், சாய்ந்தமருது   நாங்கள் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டபோது கட்டியிருக்கும் கோவணத்தை உருவி எடுக்க முயற்சிக்கின்றார்கள். எங்களுக்கு பட்டுவேட்டியும் வேண்டாம், காஞ்சிபுரம் சாரியும் வேண்டாம். இருக்கின்ற கோவணத்தை உருவ விடாது பாதுகாப்போம்.   அபிவிருத்தி என்ற போர்வையில் உயர்ந்த கோபுரத்தை அமைக்கின்றோம். ஆனால் அக்கோபுரத்தின் அத்திவாரம் இனவாதிகளினால் உடைக்கப்படுகின்றது. அதாவது ஆடம்பரத்தை நோக்கி செல்லுகையில், எங்களது அடிப்படை அரசியல் உரிமை மறுக்கப்படுவதோடு, பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது.  

  • நோன்பையும் பெருநாளையும் கடந்து செல்லும் காத்தான்குடி

    – உசேன் காத்தான்குடி: புனித ரமழான் மாதம் வருவதற்கு முன் ஹாஜா கந்தூரியிலிருந்து கொந்தளிக்கும் காத்தான்குடி, பெருநாள் முடியும்வரை சிறு சிறு சலசலப்புக்களுடன் இனிதே நிறைவடைவதுதான் கடந்த சுமார் 20 வருடங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளில் சாராம்சமாக இருக்கும்.

  • நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

    கொழும்பு: நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.  நீதிபதி ஒருவருடைய இடமாற்றம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளிட்டார் எனத் தெரிவித்தே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

  • அமைச்சர்களின் ராஜினாமாவுக்கு பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? தலைவர்கள் யார்மீது விழிப்பாக இருக்க வேண்டும் ?    

    – முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது   ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் பின்பு இவர்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுதான் இன்று அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாகும். இவர்களது ராஜினாமாவானது ஏமாற்று அரசியல் என்றும், நிலமை ஒரு முடிவுக்கு வந்ததன்பின்பு ஓரிரு மாதங்களில் தங்களது அமைச்சர் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கை இனவாதிகளிடம் காணப்படுகின்றது.

  • மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமனம்

    மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

  • சாஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தொடர்பு- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

    எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (04) முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின்  தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார் 

←Previous Page
1 … 67 68 69 70 71 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar