Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்வதேச மகளிர் தின நிகழ்வு

    அப்துல் அஸீஸ் / பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு 13.03.2015 இன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.

  • தைத்த ஆடைகளுக்கான 6 வது தொடர் வர்த்தக கண்காட்சி அங்குரார்ப்பணம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா   கொழும்பு: இலங்கையின்  தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வருமானம்  மிக உயர்ந்த வருமானமாக 2014 ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதோடு இலங்கைக்கான முக்கியமான ஐரோப்பிய ஜீ.எஸ்.பி. பிளஸ் மீட்பு வசதி வாய்ப்புக்கள் சாதகமான சமிஞையை வெளிப்படுத்துகின்றது.  நாம் இப்பொழுது எமது ஆடை ஏற்றுமதிக்கான  5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கி நகர தயாராக இருக்கிறோம்.

  • காத்தான்குடி மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் / எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி-03 ஊர் வீதியிலுள்ள மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலின் கீழ் இயங்கிவரும் மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸாவில் கடந்த 2013, 2014 ஆண்டுகளில் குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பொதுப் பரீட்சையில் சித்தியடைந்து விருதுகளையும், பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம் 13-03-2015 இன்று வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • அயலவர்கள் அனைவரும் எங்கே சென்றார்கள்? அளுத்கமைக் கலவரமும் அதன் பின்னரான நிலைமைகளும் அறிக்கை வெளியீடும் கலந்துரையாடலும்

    NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: கடந்த 15.06.2014 அன்று இடம்பெற்ற அளுத்கமை வன்முறைச்சம்பவத்தினை ஆவணப்படுத்தும் வேலைத்திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டிருந்தது.

  • ஜும்ஆ பயான்: ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயல்

    ஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர் பயான் நிகழ்த்தியவர் – அஷ் ஷெய்க் முர்ஷித் முழாபர் (ஹுமைதி), (பிரதி பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா)   தலைப்பு – இஸ்லாத்தின் பார்வையில் குடும்ப வாழ்க்கை

  • ‘இந்திய, அமெரிக்க புலனாய்வு சேவைகளே என்னை தோற்கடித்தது’: மகிந்த

    கொழும்பு: இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளின் புலனாய்வு சேவைகளே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ புலனாய்வு சேவை, எம்.ஐ.6 அமைப்பு ஆகியனவே என்னை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தன.

  • ‘இலங்கையுடனான பொருளாதார உறவு மேலும் நெருக்கமாகும்’: மோடி

    கொழும்பு: இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான பொருளாதார உறவுகள் மேலும் நெருக்கமடையும் என்று உறுதியளித்துள்ளார். இலங்கை விஜயத்தின் முதல்நாளான இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மோடி நடத்தினார்.

  • சிரியா போர்: 600 வைத்தியர்கள், தாதியர்கள் அரச படையால் குண்டுவைத்து பலி!

    லண்டன்: சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசு படைகள் தாக்கியதில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலியாகி இருக்கலாம் என நியூயோர்க்கைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் அரசு படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

  • பிறைந்துறைச்சேனை சாதுலியா மாணவர்கள் ஆசிரியருக்கெதிராக வீதியில் ஆர்ப்பாட்டம்

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வாழைச்சேனை: மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்திலுள்ள வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலைய சாதாரனதர வகுப்பு மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலையில் பாடசாலையின் பிரதான நுளைவாயிலுக்கு முன்பாக பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் ஏ.ஏ.எம்.நளீர் ஆசிரியருக்கு எதிராக வகுப்பு பாடங்களை பகிஷ்கரித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அறபு மொழி கற்கைகளை இலங்கையில் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மேன்படுத்தல் அவசியமாகும்.!

    கொழும்பு: அறபு மொழி இன்று அரசியல் பொருளாதார இராஜதந்திர தேசிய பிராந்திய சர்வதேச கேந்திர முக்கியத்துவமிக்க பாதுகாப்பு நகர்வுகள்,யுத்தம் சமாதானம் குறித்த நகர்வுகளுடன் பெரிதும் தொடர்புபட்டுள்ளது. அறபு முஸ்லிம் முஸ்லிம் உலகுடனான எமது உறவுகளை பலப்படுத்துவதற்கும் அதன் மூலம் இந்த தேசத்தினதும் அமைதி சமாதானம் சகவாழ்வு அபிவிருத்தி ஒருமைப்பாடு என்பவற்றிற்கு காத்திரமான பங்களிப்புக்களை செய்வதற்கும் அறபு மொழி பெரிதும் உதவுகின்ற மொழியாகும்.

  • செவனப்பிட்டியில் காத்தான்குடி வேன் குடைசாய்ந்ததது

    – ஏறாவூர் அபூ பயாஸ் செவனப்பிட்டி: காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் UL. அஹமத் மொஹைதீன் (65) அவர்கள் கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் நேற்றிரவு வபாத்தானதால், அன்னாரது ஜனாசாவை ஏற்றிக்கொண்டு காத்தான்குடி நோக்கி வரும்போது அதனை பின்தொடர்ந்து வந்த வேன் செவனப்பிட்டியில் வைத்து இன்று அதிகாலை 03 .00 மணியளவில் தடம் புறன்டதால் எவரும் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பினர். அல்ஹம்துலில்லாஹ்.

  • காத்தான்குடி மொடன் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைகின்றேன்: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் அஹமட் மொஹைடீன் – மொடன் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு தான் மிகவும் ஆழ்ந்த கவலையும், துக்கமும் அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 494 495 496 497 498 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar